சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு....

by சிவா |
suriya
X

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா. பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சூரி, சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படம் 2022ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், சூர்யா நடனமாடும் காட்சிகளும், அவர் ஆக்ரோஷமாக நடந்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

et

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட சாதியினர் சர்ச்சையாக்கி வருகின்றனர். சூர்யா மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.அதில் அவர் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சூர்யாவுக்கு பெரும்பாலானோரின் ஆதரவு கிடைத்தது.

இந்த சர்ச்சை ஓயாத நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Next Story