வாடா தம்பி!.. வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வீடியோ….

Published on: December 15, 2021
vaada thambi
---Advertisement---

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா. பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சூரி, சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

Also Read

இப்படம் 2022ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியானது. அதில், சூர்யா நடனமாடும் காட்சிகளும், அவர் ஆக்ரோஷமாக நடந்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது.

suriya

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அதாவது முதல் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வாடா தம்பி என துவங்கும் இந்த் பாடலை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் என இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வீடியோ சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Leave a Comment