ரெண்டு மடங்கு வேணும்.! பாலிவுட்டை அதிரவைத்த சன் பிக்ச்சர்ஸ்.! ரெம்ப அதிகம்தான்.!

by Manikandan |
ரெண்டு மடங்கு வேணும்.! பாலிவுட்டை அதிரவைத்த சன் பிக்ச்சர்ஸ்.! ரெம்ப அதிகம்தான்.!
X

தற்போது வெளியாகும் பெரும்பாலான பெரிய ஹீரோ திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் பான் இந்தியா திரைப்படங்களாக தான் வெளியாகி வருகிறது. உருவாகும்போது தன் மொழி திரைப்படமாக இருந்தாலும், அதனை டப் செய்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என ரிலீஸ் செய்து வருகின்றனர். இல்லை என்றால் பாலிவுட்டில் ரீமேக்கிற்கு விலைபேசி விடுகின்றனர்.

அப்படித்தான் அடுத்த வாரம் வெளியாக உள்ள அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படமும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரு பான் இந்தியா திரைப்படம் போல வெளியாக உள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் முழுக்க முழுக்க தமிழகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இதையும் படியுங்களேன் - இன்னும் எங்கள நீ பைத்தியக்காரனாவே நெனைக்குறியா.?! ரசிகர்களை குழப்பும் கமல்.!

சூர்யா நடித்து ஏற்கனவே அமேசான் தளத்தில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் பாலிவுட்டிலும் பெரிய அளவில் பேசப்பட்டன. இரண்டு படங்களும் ஆஸ்கர் அளவுக்கு சென்று இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாக உருவானது. இதில் சூர்யா இந்திய அளவில் பெரிய நடிகராக மாறிவிட்டார்.

அதனை பயன்படுத்தி கொள்ள தற்போது சன் பிக்சர்ஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதன்படி தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

தற்போது இந்தியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பாலிவுட் நிறுவனங்கள் விலைபேசி வருகின்றனவாம். அவர்களிடம் சன்பிக்சர்ஸ் குழு இரண்டு மடங்கு விலை கேட்டு வருகிறதாம். அந்த விலையை கேட்டு பாலிவுட் நிறுவனங்கள் தலை சுற்றி நிற்கின்றன.

ஏனென்றால் தற்போது தான் சூர்யாவின் படம் முதன்முதலாக ஹிந்தியில் ரிலீஸாக வெளியாக உள்ளதா அல்லது, இப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை கேட்டு உள்ளனரா என்பது இன்னும் தெரியவில்லை விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story