எல்லாரும் அவளோ ஆர்வமா இருக்கோம்.! இப்போ நீங்கதான் எங்க நம்பிக்கை.! ரசிகர்கள் ஏக்கம்.!

Published on: February 27, 2022
---Advertisement---

அஜித் நடிப்பில் கடந்த வியாழன் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் ரசிகர்கள் மற்றும் குடும்பங்களை கவர்ந்தாலும், அதிகமாக அனைவரையும் கவரும் வண்ணம் இல்லை என்பதே நிதர்சனம். ஆதலால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம் என்றே கூறவேண்டும்.

valimai

Also Read

அதனால், அடுத்த பெரிய பாடத்தை தியேட்டர் அதிபர்கள் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டனர். அடுத்த பெரிய ஹீரோ படம் என்றால் அது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கிஉள்ளதால், கண்டிப்பாக குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்க வருவார்கள்.

இதையும் படியுங்களேன் – வேண்டாத சர்ச்சைகள் வரும்.! மறுத்துவிட்ட சிம்பு.!? வருத்தத்தில் அந்த நடிகர்.!?

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி இந்த படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.

ஏற்கனவே வெளியான டீசர் ஆக்சன் நிறைந்ததாக காண்பிக்கப்பட்டது. தற்போது ட்ரைலர் குடும்பங்கள் ரசிக்கும் படி உருவாகி உள்ளது  என கூறப்படுகிறது. ட்ரைலர் ப்ரோமோ வீடியோவில் சூர்யாவை பார்த்து சரண்யா பொன்வண்ணன் கூறுகையில் தம்பி உன்னையதான் எல்லாரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் சீக்கிரம் வா. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என சூர்யா கூற அந்த ப்ரோமோ வீடியோமுடிகிறது.

Leave a Comment