Categories: latest news television news

எதிர்நீச்சல்: கதிருக்கு செக் வைத்த ஜீவானந்தம்… கதையில நடந்த பெரிய டிவிஸ்ட்… உனக்கு தேவைதான்…

Ethirneechal: சன் டிவி சீரியலில் ஒரு காலத்தில் டி.ஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பெரும்பாலான மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இதில் வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்தபின் இந்த சீரியல் மெதுவாக டிஆர்பி வரிசையில் இறங்க தொடங்கியது. இவருக்கு பதிலாக வந்த வேல ராம மூர்த்தி இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் நாடகத்தின் சுவாரஸ்யம் குறைந்தது.

இதற்காக இயக்குனரும் கதையை வித்தியாசமான கோணத்தில் எடுத்து சென்றார். ஆனால் அவை எதுவுமே சரிபட்டு வரவில்லை என்றுதான் கூறவேண்டும். வேறு வழியில்லாமல் தேவையில்லாத கதைகளையெல்லாம் சீரியலில் காட்டினார். இதனால் இந்த சீரியலை பார்ப்பதற்கான விறுவிறுப்பு மக்களிடம் குறைந்தது.

இதையும் வாசிங்க:லியோ படத்தை தூக்கிட்டு எம்ஜிஆர் படத்தை திடீரென மாற்றிய உட்லண்ட்ஸ் தியேட்டர்.. சென்னையிலயே பாவம்!..

ஆனால் தற்போது ஆதி குணசேகரனான வேலராமமூர்த்தி திரும்பவுல் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதனால் கதை கொஞ்சம் சூடுபிடிக்கவும் ஆரம்பித்துள்ளது. மேலும் ஆதிகுணசேகரனும் அவரது தம்பியான கதிரும் இணைந்து ஊர் திருவிழாவில் அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் ஜீவானந்தமோ ஆதிகுணசேகரனை கொல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கான வேலையை பார்க்க ஆதிகுணசேகரன் கதிரை முன்னாடியே திருவிழாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கதிர் பெண்கள் பின்னாடி சுற்றுபவர் என்பதால் அவரை ஒரு பெண் கால் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தார்.

இதையும் வாசிங்க:மைக் மோகன்னு சொன்னாங்க!.. கடைசியில மனோபாலாவுக்கே சிலை வச்சிட்டாங்களா ரஜினி ரசிகர்கள்!..

அப்பெண் கூறியதை கேட்டு சென்ற கதிருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் தன்னை மாட்டிவிடதான் கூட்டி செல்கிறார் என்பதை அறியாத கதிர் தற்போது ஜனனியின் நண்பன் மற்றும் ஜீவானந்தத்தின் உதவியாளராக இருக்கும் கெளதமிடம் மாட்டி கொண்டுவிட்டார். இன்றைய ப்ரோமோவில் கதிரை கெளதம் மற்றும் அவரின் அடியாட்கள் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ரொம்ப நாட்களாய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Published by
amutha raja