எதிர்நீச்சல் ஆதிரை செய்த தீபாவளி ஷாப்பிங்!.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...
எதிர் நீச்சல் சீர்யல் நடிகை ஆதிரை தீபாவளி ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யா தேவராஜன்.
ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நாளை மறுநாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இவர் சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது ஆதிரையும் ஷாப்பிங் செய்துள்ளார்.
குறைந்த விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக கூறி தனது மொத்த குடும்பத்துக்கும் ஷாப்பிங் செய்துள்ளார். இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.