Connect with us
thiru

latest news

இளையராஜாவுடன் பணிபுரிந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்! வெளிவந்த தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் கடந்தாண்டு ஒளிப்பரப்பானதில் இருந்து இன்று வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தில் தான் இருக்கின்றது.

இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதாவது ஒரு விதத்தில் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். ஆதி குணசேகரன் மோசமான கேரக்டரை வெளிப்படுத்தினாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இதையும் படிங்க : வடிவேலுயை நம்பி களமிறங்கும் சந்திரமுகி 2… மியூசிக்கில் கூட சொதப்பினாரா கீரவாணி… என்னங்க இப்படி!

அதே போல் நந்தினி, ஜனனி என ஒவ்வொருத்தருக்கும் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். இந்த பெருமைக்குரிய சீரியலை திருச்செல்வம்தான் இயக்குகிறார். அவரும் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் முதலில் மெட்டி ஒலி சீரியலை எடுத்த திருமுருகனிடம் உதவியாளராக இருந்தவர். ஆனால் அதற்கு முன்பாகவே சினிமா மீது பைத்தியமாக இருந்திருக்கிறாராம் திருச்செல்வம் . அதன் காரணமாகவே சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்திருக்கிறார்.

அதுவும் இளையராஜாவிடமே திருச்செல்வம் பணியில் இருந்தாராம். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் கூட இளையராஜாவுடன் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறாராம் திருச்செல்வம். அந்தப் படத்தில் ஒலி கோர்ப்பில் பணிபுரிந்தாராம்.

இதையும் படிங்க : வாழ்நாளில் வாங்காத சம்பளம்! ரஜினியால் பகத்பாசில் காட்டில் கொட்டிய பண மழை – என்னத்த சொல்றது?..

அதன் பிறகு தான் சீரியல்களை இயக்குவதில் கவனம் வந்து சின்னத்திரை பக்கம் சேர்ந்திருக்கிறார். இல்லையென்றால் இன்று திருச்செல்வத்தை ஒரு இசையமைப்பாளராகவோ அல்லது பெரிய பெரிய படங்களில் ரிக்கார்டிங் தியேட்டர்களிலோதான் பார்த்திருக்க முடியும். இதை அறிந்த ரசிகர்கள் சில பேர் இவர் இளையராஜாவிடம் பணிபுரிந்திருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

google news
Continue Reading

More in latest news

To Top