மானங்கெட்ட பரம்பரை! குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜீவனாந்தம் - ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பகடைக்காயாக மாறியது யார்?

by Rohini |
jeeva
X

jeeva

சன் டிவியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது எதிர்நீச்சல் சீரியல். திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகிய இந்த சீரியல் கடந்த ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. ஒளிபரப்பான நாள் முதல் இன்று வரை எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தமிழகமெங்கும் பல ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டிஆர்பியிலும் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கின்றன.

ஆரம்பத்தில் தன்னுடைய தந்தைக்காக புகுந்த வீட்டில் படும் அவலங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக ஜனனி என்ற கதாபாத்திரம் உருவானது. ஆனால் அது அப்படியே மாறி மாறி ஒரு குடும்பத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த சீரியல் இப்போது ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு இந்த சீரியலில் புது கதாபாத்திரமாக ஜீவானந்தம் என்ற ஒரு கேரக்டர் உள்ளே நுழைந்தது. அவர்தான் இந்த கதையின் இயக்குனர் தயாரிப்பாளர் திருச்செல்வம்.

jeeva1

jeeva1

மன்னர் பரம்பரை அந்தப் பரம்பரை இந்தப் பரம்பரை என பீத்திக் கொண்டிருந்த குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக உள்ளே நுழைந்தார் ஜீவானந்தம். ஒரு குண்டு சத்தத்தை கேட்டாலே பயந்து நடுங்கும் ஒருவரை வில்லன் என்று சொன்னால் சிரிப்பாகத்தான் வரும். அப்படிப்பட்ட நிலைமையில் தான் இப்போது குணசேகரனும் இருக்கிறார்.

எப்படியாவது ஜீவானந்தத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் உள்ள பெண்களை சென்டிமென்டாக தாக்கி ஜீவானந்தத்திற்கு குரல் கொடுக்க வைப்பது தான் இப்போது குணசேகரின் முதல் வேலையாக இருக்கின்றது. தனி ஆளாக ஒன்றும் செய்ய முடியாது என்பதை நன்றாக தெரிந்து கொண்ட குணசேகரன் போலீஸ் அது இதுன்னு போனாலும் வேலைக்கு ஆகாது என நினைத்துக் கொண்டார்.

அதனாலேயே அந்த வீட்டில் உள்ள பெண்களை பகடைக்காயாக மாற்றி ஜீவானந்தத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் தனக்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் குணசேகரன். அதற்காகவே ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நாடகங்களை நடத்தி அதன் மூலம் அதன் மீது இரக்கத்தை வர வைக்கிறார் குணசேகரன்.

ஏற்கனவே அழுது ஆர்ப்பாட்டம் செய்து நந்தினி ரேகா இவர்களை நம்ப வைத்து விட்டார். அதனை எடுத்து இரவு நேரத்தில் திடீரென துப்பாக்கி குண்டு சவுண்டு கேட்பதாக அலறி பயந்து ஓடி வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்களும் சிரித்து தான் போயிருக்கின்றனர். இவரால் இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைக்கின்றது.

jeeva2

jeeva2

இப்படி ஒவ்வொரு நாளும் தனது நாடகங்களை நடத்தி வரும் குணசேகரன் இடம் ஆடிட்டர் மறுபடியும் ஒரு சொத்து நம்மை விட்டு போகப் போகிறது என சொல்ல நெஞ்சுவலியால் துடிதுடித்து போகிறார். இது புரியாமல் அங்கிருந்தவர்கள் அனைவரும் குணசேகரனின் அப்படியே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

இதையும் படிங்க : பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. ‘காஞ்சனா’வை ஓரம் கட்ட நடிகரை டார்ச்சர் செய்யும் இயக்குனர்

இந்த வாரம் முழுவதும் இப்படித்தான் மாறப்போகிறது குணசேகரன் நாடகத்தில் ஜனனியும் வந்து விழுக மற்ற பெண்களும் குணசேகரனை நம்பி ஜீவானந்தத்திற்கு எதிராக திரும்பப் போகிறார்கள். தன்னுடைய நாடகத்தால் ஜீவானந்தத்தை ஒழித்துக் கட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story