வில்லனா வந்த என்ன ஹீரோவாக்கிட்டீங்களே! ‘எதிர்நீச்சல்’ சீரியலில் மாஸ் காட்டப் போகும்  நடிகர்

by Rohini |   ( Updated:2023-07-23 06:24:31  )
ethir
X

ethir

கடந்த ஒருவருடமாக சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரம் தன் தந்தையின் லட்சியத்திற்காக புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. ஆனால் போகப் போக சீரியலில் ஏகப்பட்ட பிரச்சினைகள், குளறுபடிகள் என சீரியல் சூடு பிடித்து வருகிறது.

ethir1

ethir1

தமிழகமெங்கிலும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆரம்பகாலங்களில் மெட்டிஒலி, சித்தி போன்ற சீரியல் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு இந்த சீரியலும் பெருமளவு பேசப்பட்டு வருகிறது. எதிர் நீச்சல் சீரியலை திருச்செல்வம் தான் இயக்கி தயாரிக்கிறார்.

அவரும் இந்த சீரியலில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதில் மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம் மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

ethir2

ethir2

ஒரு வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணமாகி அவர்களுக்கு வரும் மனைவிகளுக்குள் அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்குமா என்று தெரியாது. ஆனால் இந்த சீரியலில் அந்த நான்கு மருமகளும் சேர்ந்து பேச்சு இருக்கே? அதிலும் குறிப்பாக நந்தினி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் நடிகை ஹரிப்பிரியா.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஆதிரையை திருமணம் செய்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை விமல் குமார். ஆரம்பத்தில் இவர் மீது வெறுப்பே வந்தது. வேறு ஒருவரை காதலிக்கும் ஆதிரையை வலுக்கட்டாயமாக திருமணம் செய்கிறாரே என கரிகாலன் மீது அனைவரும் வெறுப்பை கொட்டத் தொடங்கினார்கள். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் மண்ணள்ளி போட்டார் இயக்குனர். ஆதிரையை கரிகாலன் தான் திருமணம் செய்தார்.

ethir3

ethir3

இருந்தாலும் நாளுக்கு நாள் கரிகாலன் பண்ணும் சேட்டைகள், அதிகமாக பேசாவிட்டாலும் தனக்கே உரிய பாடி லாங்குவேஜால் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து வருகிறார். சொல்லப்போனால் இந்த சீரியலில் இப்போது கரிகாலனாக இருக்கும் விமல் குமாருக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில் இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பிறந்த நாள் விழாவில் எதிர் நீச்சல் டீம் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தப் போது குணசேகரான மாரிமுத்து ‘இனி எதிர் நீச்சல் சீரியல் கரிகாலன் இல்லாமல் ஓடாது , அந்த அளவுக்கு பட்டையை கிளப்ப போகிறார்’ என்று ஒரு ஹிண்ட்டை கொடுத்திருக்கிறார்.

ethir4

ethir4

Next Story