சூர்யாவுடன் கைகோர்க்கும் அடுத்த ப்ளாக்பஸ்டர் பட ஹீரோயின்!.. சூர்யா - 42 ஐ அலங்கரிக்கும் பாலிவுட் அழகிகள்..
சிறுத்தை சிவா இயக்கத்தி சூர்யா நடிப்பில் சூர்யா - 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 10 மொழிகளில் தயாராகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. மேலும் பேன் இந்தியா படமாகும் உருவெடுத்து வருகின்றது.
சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட் உள்ள படமாக இந்த சூர்யா - 42 திரைப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஒரு வரலாற்று கதையை அடிப்படையாக வைத்து அமைவதால் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க : தளபதி 67-வுடன் மோதியே ஆகணும்!.. சம்பவம் பண்ண தயாராகும் அஜித்!.. அடுத்த ரவுண்டு ரெடி!…
சூர்யாவும் திஷா பதானியும் லீடு ரோலில் நடிக்கின்றனர். பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இருக்கும் திஷா பதானி நடிக்கின்ற முதல் திரைப்படமாக இது அமையும். ஏற்கெனவே சங்கமித்ரா படத்தில் இவரும் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தின் நிலைமை என்ன என தெரியவில்லை.
இந்த நிலையில் மேலும் ஒரு பாலிவுட் ஹீரோயினை களமிறக்க படக்குழு முடிவெடுத்திருக்கின்றனர். நடிகை மிருனள் தாகூரை படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க அணுகியிருக்கின்றனர். அவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க : வெளிநாட்டில் ஷூட்டிங்!.. ஒருவரை பார்த்து நெகிழ்ந்துபோன எம்.ஜி.ஆர்.. அவர் யார் தெரியுமா?…
மராத்தியில் தன்னுடைய அறிமுகம் என்றாலும் மிருனள் தாகூர் பாலிவுட்டில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் ஒரு பேன் இந்தியா படமாக வெளியான துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர் மிருனள் தாகூர்.
அவரும் சூர்யாவின் 42 படத்தில் இருக்கிறார் என்ற செய்தி மிகவும் வைரலாகி வருகின்றது. கூடிய சீக்கிரம் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் பட்சத்தில் அம்மணி விரைவில் படப்பிடிப்பிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் uv கிரியேஷன்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் இணைந்து தயாரிக்கும் படமாக சூர்யா - 42 திரைப்படம் அமையும்.