சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சினை கடந்த சில மாதங்களாக தலைவெறி கோலமாக ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் தான். அதற்கு ஏன் இந்த அளவு விவாதம் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற பிரபு கூட கூறியிருந்தார்.
அவர் மட்டுமில்லை சினிமாவில் இருக்கும் பல பேரும் அதை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசிய பேச்சு மிகவும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : படப்பிடிப்புக்கு யாராவது லேட்டா வந்தா அஜித் இதைதான் செய்வார்.. நடிகை சொன்ன சீக்ரெட்..
நீண்ட நாள் வைத்திருந்த கோபத்தை அன்று கொட்டியே தீர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தார் போல. குட்டிக் கதைகளை சொல்லி அரங்கையே திடுக்கிட வைத்தார். இருந்தாலும் ஒரு மூத்த நடிகர் இந்த அளவு பேசியிருக்கக் கூடாது என வலைப்பேச்சு பிஸ்மியும் ஒரு பேட்டியில் கூறினார்.
ஜெய்லர் படம் வருகிற 10 ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார்,மோகன் லால், விநாயக், தமன்னா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : இவனுக்கெல்லாம் எதுக்கு வாய்ப்பு கொடுக்குற!.. சிம்புவிடம் சீறிய கவுண்டமணி!..
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் அதன் ஒளிபரப்பு வருகிற ஞாயிற்று கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் என்னவென்றால் அந்த விழாவில் ரஜினி பேசும் போது ‘ஜெய்லர் படத்தில் வில்லனாக நடிக்க ஒரு தென்னிந்திய பிரபல நடிகரை அழைத்தேன், ஆனால் அவரால் வரமுடியவில்லை’ என்று சொல்லியிருக்கிறாராம்.
இதை பற்றி ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் அந்த நடிகர் யார் தெரியுமா? என கேட்டிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் ‘அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நான் பார்க்கவில்லை, ஞாயிற்று கிழமை டிவியில் ஒளிபரப்பாகிறது. அதில் ரஜினி யாரை பற்றி சொல்லியிருக்கிறார் என்பதை பார்த்து விட்டு சொல்கிறேன் ’ என்று பதிலளித்திருந்தார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…