விஜய் சேதுபதி சம்பளத்தை கேட்டு ஆடிப்போன இந்திய சினிமா… அந்த ஹீரோவுக்கு கூட இத்தனை கோடி இருக்காதே..?!

Published on: July 18, 2022
---Advertisement---

ஒரு நல்ல நடிகராக இருந்தால் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நமது திறமையை காட்டினாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்கு தற்போதைய சிறந்த உதாரணம் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்பதில்லை கொடூர வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

Also Read

தற்போது, விஜய் சேதுபதிதான் எங்கள் படத்திற்கு வேண்டும் என பலரும் கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தமிழை போல தற்போது ஹிந்தியில் 4,5 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். குறிப்பாக,  இவருக்கு வில்லன்  கதாபாத்திரத்தில் நடிக்க அதிக  வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

ஆனால், இவரது நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வைக்கல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேப்பை பெற்றாலும், கடைசியாக வெளியான மாமனிதன் திரைப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்களேன் – விஜயகாந்தை பார்த்து நடுங்கி உளறிய ரஜினிகாந்த்… எல்லாம் அந்த விஷயத்துக்காக தான்…

Vijay sethupathy

இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி தனது படத்தில் வாங்கும் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த படத்தில் 30 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் சம்பளமே ரூ.30 கோடி தான். இப்பொது, இவர் அந்த சம்பளத்தை கேட்டுள்ளதால் கதாநாயகனை சம்பளத்தை மிஞ்சி விடுவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.