சிறந்த நடிகராக இருந்தும் தொடர் தோல்விகள் ஏன்?.. இவ்வளவு காரணங்கள் இருக்கா?!..

by sankaran v |   ( Updated:2023-03-20 04:10:25  )
சிறந்த நடிகராக இருந்தும் தொடர் தோல்விகள் ஏன்?.. இவ்வளவு காரணங்கள் இருக்கா?!..
X

Vikram in I

நடிகர் விக்ரமிற்கு முதல் தமிழ்ப்படம் என்காதல் கண்மணி. 1990ல் வெளியானது. ஆனால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவர் பெயர் வெளியே தெரியவில்லை. 1992ல் தான் பி.சி.ஸ்ரீராமின் இயக்கத்தில் மீரா என்ற படம் விக்ரமுக்கு வந்தது. இதில் ஓ பட்டர்பிளை பாடல் மட்டும் ஹிட்டானது.

Vikram in En kadhal kanmani

அவரது திரையுலக வாழ்க்கையில் முதல் திருப்புமுனை தந்த வெற்றிப்படம் சேது. 9 ஆண்டுகள் கழித்தே, விக்ரத்திற்கு முதல் வெற்றிப்படம் அமைந்தது. பிரபல நடிகரானார். சேது படத்திற்குப் பிறகு அவரது பெயருக்கு முன்னால் ச்சீயான் அடைமொழியாகவேத் தொற்றிக் கொண்டது.

பிறகு, தில், தூள், காசி, ஜெமினி, அந்நியன், சாமி, பிதாமகன் என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது லெவலை மாற்றி அமைத்தார் விக்ரம். 2009ஆம் ஆண்டு இவர் நடிப்பில் கந்தசாமி படம் வெளியானது. அதுவே அவருக்குக் கடைசி வெற்றிப்படம்.

Rajapaattai Vikram

அதன் பிறகு நீண்ட இடைவெளியானது. படத்தில் நடித்தார். ஆனால் வந்ததும் தெரியவில்லை. அவை போனதும் தெரியவில்லை. டேவிட், ராஜபாட்டை, தாண்டவம், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்கள் இந்தக் காலகட்டத்தில் தான் வெளியாயின.

1999களில் தொடங்கிய அவருடைய வெற்றிப்பட பயணம், 10 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இதைத் தான் நேரம்னு சொல்றாங்க. ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட நேரம் வரும். சுக்கிரன் உச்சத்துல இருக்கான்னு சொல்வாங்க.

அது மாதிரி தான் நடிகர் விக்ரமுக்கும் ஒரு நேரம் வந்தது. அவருடைய படங்கள் இந்த 10 ஆண்டுகளிலும் சக்கை போடு போட்டன. அவருடைய வெற்றிப்படங்கள் என்று பார்த்தால் அப்போது வெறும் 9 படங்கள் தான்.

தொடர்ந்து அவரால் அதிகளவில் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியவில்லை. ஆனாலும் அவர் சிறந்த நடிகர் தான். படத்துக்குப் படம் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே தான் இருந்தார். ஆனாலும் படம் ஓடவில்லை.

முதல் படம் நடிக்கும் போது அவருக்கு 24 வயது. இப்போது 44 வயது. இருந்தாலும் சாதனைக்கு வயது தடை இல்லை என்பர். ஆனாலும் அவரது தோற்றத்தில் முதிர்ச்சி தெரிகிறது. அதனால் தொடர்ந்து இனியும் அவர் சூப்பர் மேன் ஹீரோவாக இல்லாமல் தனது வயதுக்கேற்ற பொருத்தமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தால் தான் ஜொலிக்க முடியும்.

விக்ரம் திறமையான நடிகர் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் அவரது திறமைக்குத் தீனி போட்ட படங்கள் மிகக்குறைவே. ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில், மிகவும் சிரமப்பட்டு, உடலைவருத்தி ஆண்டுக்கணக்கில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனாலும் சில நாள்கள் படம் பேசப்பட்டது.

படம் பெரிய அளவில் வெற்றி என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அந்நியன் படத்தில் அற்புதமான பாத்திரம். சிறந்த நடிப்பு. படம் செம மாஸ். சாமி படத்தில் ஆறுச்சாமியாக காவல்துறை அதிகாரி வேடத்தில் வந்து செம மாஸ் காட்டியிருந்தார் விக்ரம். ரசிகர்கள் அப்போது விக்ரமைக் கொண்டாடினர்.

இருமுகன் படத்தில் அவர் திருநங்கை வேடத்தில் நடித்தார். படம் ஓடவில்லை. தாண்டவம் படத்தில் கண் பார்வையற்றவராக அற்புதமாகவே நடித்தார். படம் ஓடவில்லை. காரணம் படமானது ரசிகர்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

Thandavam

தாண்டவம் படத்தில் கண் பார்வையற்றவராக அற்புதமாகவே நடித்தார். படம் ஓடவில்லை. இந்தப் படத்தில் நடித்த விக்ரம், அனுஷ்கா ஜோடியின் தெய்வத்திருமகள் படம் செமயாக இருந்தது. இருந்தும் ரசிகர்கள் விக்ரமின் நடிப்பை ரசிக்கின்றனர். அப்போதே மறந்து விடுகின்றனர்.

காரணம் ரசிகர்களுக்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கமர்ஷியலாகவும் அவ்வப்போது ஹிட் கொடுக்க வேண்டும். நகைச்சுவையும் இருக்க வேண்டும். இவை எல்லாம் விக்ரமிடம் மிஸ்.

கோப்ரா படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் அப் ஆகல. அதே போல கமல் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் அந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

இது போன்ற காரணங்களால் தான் ரசிகர்கள் மத்தியில் அவர் இன்னும் அஜீத், விஜய் அளவுக்கு அவரால் வளர முடியவில்லை.

மேற்படியான காரணங்களால்தான், விக்ரம், சொல்லும் அளவிற்குப் பிரபலமாகாமல் போய்விட்டார்.

Next Story