More
Categories: Cinema News latest news

என் பக்கம் நியாயம் இருக்கு!.. திரும்பி எல்லாம் போக முடியாது.. மாரிசெல்வராஜ் ஆவேசம்..

இயக்குநர் மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இய்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் வசூலில் வெற்றி பெருவதோடு மட்டுமின்றி பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையும் பெரும். ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை வைத்து இவர் படம் எடுப்பதால், ஒருசிலர் இவரை சாதி படம் எடுக்கிறார் என்று கூறிவருகின்றனர்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஓடிடியில் வெளியான பிறகு வில்லனாக நடித்த ஃபகத் பாசில் தான் பெரிதும் பேசப்பட்டார். சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் இதுகுறித்து வெளியானது.

Advertising
Advertising

இதையும் படிங்க- ஒரு சைக்கோவை ‘மாமன்னனா’ காட்டினா ஏத்துக்குவோமா? வேண்டாத வேலை பார்த்த மாரிசெல்வராஜ்

இந்நிலையில் இயக்குநர் மாரிசெல்வராஜ், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்க்குடிமகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது திரைத்துறையினர் தான் என்னை வளர்த்து விட்டவர்கள். முதல் படத்தில் நான் பேசிய அரசியலை புரிந்துகொண்டு, அது சரி என்று உணர்ந்து, அவர்களாகவே வாழ்த்து தெரிவித்தனர். 

அதன் பிறகு தான் பரியேறும் பெருமாள் படம் மக்களிடம் சென்று சேர்ந்தது. அதே போல தான் இன்று வரை திரைத்துறையினர் சமூக பொறுப்போடு இருப்பவர்கள் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு கை கொடுத்து வருகின்றனர். அந்த முயற்ச்சிகள் மக்களிடம் சென்று சேர உதவுகின்றனர்.

என்னுடைய படம் பேசுவது சரியான அரசியல், என் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். சினிமாவில் இருக்கும் எல்லாருக்கும் அது புரியும். ஒரு சிலர் வெளியே வேற மாதிரி காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கும் தெரியும். நான் பேசுவது சரி என்று.

வேறு சில காரணங்களால் அவர்கள் வெளியே வேற மாதிரி பேசுவார்கள். நான் வெகு தூரம் கடந்து வந்துவிட்டேன். இனி திரும்பி எல்லாம் போக முடியாது. ஒரு கலைஞனாக நான் சமுதாய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று மாரி செல்வராஜ் பேசினார்.

இதையும் படிங்க- இந்த அநியாயம் பண்றீங்களேடா!.. விஷயம் புரியாம வச்ச ‘மாமன்னன்’ கவர் போட்டோவை ரிமூவ் பண்ண ஃபகத் பாசில்!..

Published by
prabhanjani

Recent Posts