Categories: Entertainment News latest news

திருமணத்திற்கு பிறகு திடீர் முடிவு எடுத்த நஸ்ரியா.! கணவன் வழியில் புது ரூட்டு.!

தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் தற்போதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நினைவில் நிற்பவர் நடிகை நஸ்ரியா அவரது குறும்புத்தனமான நடிப்பும் கொள்ளை அழகு அவரை இன்னும் நினைவில் வைத்துக் கொள்ள  உதவுகிறது.

ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நஸ்ரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால்,  தனக்கு நல்ல மார்க்கெட் இருந்தபோது மலையாள நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு, குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதேநேரம், ஃபகத் பாசில் மலையாளம் கலந்து தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி அதிலும் தனது நடிப்பாற்றல் மூலம் முத்திரை பதித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- இது சந்தானத்தின் புது ஸ்டைல்.! முடிச்சிட்டுதான் பேசுவோம்.!

தற்போது, அதே பாணியை மனைவி நஸ்ரியாவும் கையாள உள்ளார் முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

இப்படத்திற்கு “ஷால் அன்டே சுந்தரானிக்கி” என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை விவேக் ஆத்ராயா எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan