இந்தியன் 2வின் தெறிக்கும் புத்தம் புது அப்டேட்.! தமிழ் சினிமாவை மிரட்ட மீண்டும் வருகிறார் வில்லாதி வில்லன்.!

Published on: August 10, 2022
---Advertisement---

உலக நாயகன் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விக்ரம். இப்படம் மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இப்படத்தின் வெற்றியை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனால், கிடப்பில் போடப்பட்ட இந்தியன் – 2 படமும் தூசி தட்டி புத்துயிர் பெற்றது. நீண்ட நாள்களாகவே நிலுவையில் இருந்த இப்படம் மீண்டும் உருவாக்கபடவுள்ளது. இந்த படத்தில், கமல், நெடுமுடி வேணு, விவேக், சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியாபவானி சங்கர், டெல்லிகணேஷ் என மிகப்பெரிய நடிகர்கள்  பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் கூட, நடிகை காஜல் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அண்மையில் இப்படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இதையும் படிங்களேன் –  ப்ளீஸ் திட்டாதீங்க.. அந்த சம்பவம் உண்மைதான்… ஷங்கர் மகளால் வருத்தப்பட்ட ராஜலட்சுமி.!

தற்போது, இப்படத்திற்கான செட் அமைக்கும் பணி ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வர, இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்பு காலத்தில் கமல் மற்றும் சத்யராஜின் காம்போ மிகவும் பேசப்படும், தற்போது அதே காம்போ திரும்பி வருவதாக தெரிகிறது. சத்யராஜ் ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசனின் காக்கிச்சட்டை, விக்ரம், ரஜினியின் மிஸ்டர் பாரத் உள்ளிட்ட பல திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் வேடங்களில் நடித்த பிரபலமாகி பின்னர் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளம் வந்தார்.

தற்போது, மீண்டும் அவர் வில்லன் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும், இதில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க  அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.