விரைவில் இணைய இருக்கும் தனுஷ்-சிம்பு… இயக்கம் டூ நடிப்பு வரை அனைத்தும் அவங்களே… கசிந்த ருசிகர தகவல்…

Published on: October 17, 2022
தனுஷ் - சிம்பு
---Advertisement---

தமிழ் சினிமாவில் நேரெதிர் துருவங்கள் எனக் கூறப்படும் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு வந்தவர் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் நடுவில் அவரின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது. இதை தொடர்ந்து, எல்லா பிரச்சனையையும் சரி செய்த சிம்பு தற்போது நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என அவர் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது. ஆனால், இவருக்கு நேரெதிர் தனுஷ்.

தனுஷ்
தனுஷ்

செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாவது படத்திலும் நடித்தார். அவ்வாறு உருவான காதல் கொண்டேன் திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து, தற்போது இவரின் ஆதிக்கம் ஹாலிவுட் வரை சென்று இருக்கிறது.

சிம்பு
சிம்பு

இப்படி இருவேறு குணங்களை கொண்டிருந்தாலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. அவர்களின் சினிமா மீதான் காதல் தான். இயக்கம் முதல் பாடல் பாடுவதை வரை இருவருமே செய்வார்கள் என்பது ஊரறிந்த சேதி. இதனால் தான் தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள். இப்படத்தினை தனுஷ் இயக்கலாம் என அறியப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் சிம்பு இப்படத்திற்கு வசனம் எழுதலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதையும் படிங்க: சிம்பு மேல் இவ்வளவு குற்றச்சாட்டா? அவரே ஒரு குழந்தைதான்… சப்போர்ட்டுக்கு வந்த பிரபல இயக்குனர்…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.