குடிபோதையில் இருந்த சாவித்திரியை அலேக்காக தூக்கிக்கொண்டு சென்ற தயாரிப்பு நிர்வாகி… இவருக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்??
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த சாவித்திரி, மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். சாவித்திரியும் ஜெமினி கணேசனும் காதலித்து திருமணம் செய்துகொண்டதும் அதன் பின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்த செய்தியும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்ததே.
ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பிறகு சாவித்திரி குடிக்கு அடிமையாகிப்போனார். ஆதலால் அவரது உடல் நிலை மோசமானது. இந்த நிலையில் கோமா நிலைக்குச் சென்ற சாவித்திரி 1981 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி காலமானார்.
இதனிடையே சாவித்திரி குடிக்கு அடிமையான போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பிரபல தயாரிப்பு நிர்வாகியான ஏஎல்எஸ் வீரய்யா தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது ஹார்பரில் நின்றுகொண்டிருந்த மிலிட்டரி கப்பலில் ஒரு அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் சாவித்திரி உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் சாவித்திரியால் அன்று வரமுடியவில்லையாம்.
அன்றைய நாள் சாவித்திரி குடி போதையில் இருந்தாராம். அப்போது சாவித்திரியின் வீட்டிற்குச் சென்ற ஏஎல்எஸ் வீரய்யா சாவித்திரியை ஒரு வழியாக அழைத்துக்கொண்டு காரில் ஏற்றி துறைமுகத்துக்கு அழைத்து வந்துவிட்டாராம்.
ஆனால் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பலில் சாவித்திரியால் ஏறமுடியவில்லையாம். அதன் பின் ஏஎல்எஸ் வீரய்யா தனது தோளில் சாவித்திரியை தூக்கிக்கொண்டு கப்பலின் படிகளில் ஏறிச்சென்று கப்பலுக்குள் இறக்கிவிட்டாராம். அதன் பின் ஒருவழியாக அந்த விழாவில் குடி போதையில் இருப்பது வெளியே தெரியாததுபோல் சமாளித்துக்கொண்டாராம் சாவித்திரி.