Connect with us
vaali_main_cine

Cinema History

எம்ஜிஆருக்கும் வாலிக்கும் இடையே ஏற்பட்ட மோதல்!.. கோபத்தில் வாலி செய்த செயலால் ஆடிப்போன தலைவர்!..

60கள் காலகட்டத்தில் சினிமாவில் மூவேந்தர்களாக கோலோச்சியவர்கள் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி. அதில் சிவாஜியும் எம்ஜிஆரும் இரு பெரும் துருவங்களாக சினிமாவை ஆண்டு வந்தார்கள். இருவருக்கும் தனி தனியே குரூப் இருந்தது. சிவாஜியை இயக்கிய இயக்குனர் எம்ஜிஆரை இயக்குவதில்லை.

எம்ஜிஆரை இயக்கிய இயக்குனர் சிவாஜியை இயக்குவதில்லை. இது போல் பல டெக்னீசியன்கள் சிவாஜிக்கு எம்ஜிஆருக்கு என்று தனித்தனியே இருந்தார்கள். அந்த வகையில் இருவருக்கும் பொதுவாக இருந்தவர்கள் பாடலாசிரியர்கள் கண்ணதாசனும் வாலியும்.

vaali1_cine

vaali mgr

குறிப்பாக சிவாஜிக்கு வாலியின் வரிகளில் பொன்னான பாடல்கள் அமைந்து நல்ல வரவேற்பை பெற்றன. எம்ஜிஆருக்கு எழுதும் போது மட்டும் எம்ஜிஆரை நினைவில் வைத்து தான் வாலி பாடல்களை எழுதுவாராம். நான் ஆணையிட்டால் பாடல் அன்று தான் எம்ஜிஆர் அரசியலுக்குள் புகுந்த நேரம். இந்த பாடல் மூலம் மக்களுக்கு என்ன சொல்லவருகிறேன் என்று வெளிப்படையாக பாடல் மூலம் சொல்லியிருப்பார்.

இதையும் படிங்க : சேரன் கடுப்புக்கு ஆளான மஞ்சுளா விஜயகுமார்!.. விஷயம் அறிந்து விஜயகுமார் என்ன செய்தார் தெரியுமா?..

அது போல் வாலியின் பாடல் வரிக்கு எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எம்ஜிஆரின் அழைப்பின் பேரில் வாலியும் அந்த படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தார். வாலியை பார்த்ததும் எம்ஜிஆர் அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டு வாலியின் தோளின் மேல் கையை போட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

vaali3_cine

vaali mgr

அப்போதே வாலிக்கு தெரிந்து விட்டது. ஏதோ ஒரு பிரச்சினை என்று. ஏனெனில் சாதாரணமாக எம்ஜிஆர் யார் மீதும் தோளில் கை போட மாட்டாராம். பிரச்சினை என்றால் மட்டுமே அப்படி செய்வதுண்டாம். அதன் காரணமாக வாலி புரிந்து கொண்டார். வெளியே அழைத்து வந்ததும் வாலியிடம் உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது என்று எம்ஜிஆர் கூறினாராம்.

இதை கேட்டதும் வாலிக்கு பெரிய அதிர்ச்சி. என் பாட்டில் பிழையா? அப்படி என்ன பிழை? என்று வாலி கேட்க இந்த பாட்டில் எந்த பொருளும் இல்லை என்று சொன்னதும் பயங்கர கோபம் வந்துவிட்டதாம். உடனே எம்ஜிஆரிடம் வாதாடியிருக்கிறார் வாலி.

இதையும் படிங்க : விஜயை வைச்சு செய்யப்போறேன்!.. பொறாமையில் பொலந்து கட்டிய விஷால்!..

உடனே எம்ஜிஆர் அருகில் இருந்த ஒரு தமிழ் பண்டிதரை அழைத்து அவரை பார்க்க சொல்லியிருக்கிறார். அவரும் இதில் எந்த பொருளும் இல்லை என்று சொன்னதும் வாலிக்கு மேலும் அதிர்ச்சி. உடனே எம்ஜிஆர் திருத்தம் செய்து கொண்டு வாருங்கள் இல்லையென்றால் வேறொரு பாட்டை எழுதி கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாராம்.

vaali2_cine

vaali mgr

அதன் பின் வாலி அந்த பண்டிதரிடம் என்னய்யா பிழை இருக்கிறது என்று கேட்க அதற்கு அந்த பண்டிதர் எந்த பிழையும் இல்லை, எம்ஜிஆரிடம் வாதாடாமல் இருந்தாலே போதும். அதற்காக தான் அப்படி சொன்னேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தாங்கிக் கொள்ளாத வாலி எம்ஜிஆரிடம் மீண்டும் இந்த பாட்டு பிடிக்கவில்லை, வேற எழுதிக் கொண்டு வா என்று சொன்னால் கூட தப்பில்லை. ஆனால் பிழையே இல்லாத என் பாட்டில் பொருள் இல்லை என்று சொல்வது தான் தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்று சொல்லிவிட்டு வாலியும் போய்விட்டாராம்.

அதன் பின் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஜிஎன் வேலுமணி வாலியை தொலைபேசியில் அழைத்து ஏன் இப்படி செய்தீர்கள்? இதற்கு பின் எப்படி சின்னவர் நீங்கள் பாட்டு எழுத ஒத்துக் கொள்வார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாலி எனக்கு உள்ளதை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது அதே போல் எனக்கு இல்லாததை யாராலும் கொடுக்க முடியாது என்ற தத்துவத்தை கூறி போனை வைத்து விட

vaali4_cine

vaali mgr

சரியாக ஒரு வார காலத்திற்கு பின் அதே வேலுமணி மீண்டும் வாலியிடம் நீங்கள் அந்த பாட்டை மாற்ற வேண்டாம் என்று சின்னவர் சொல்லிவிட்டார். அது மட்டுமில்லாமல் மீதமுள்ள நான்கு பாடல்களையும் உங்களையே எழுத சொல்லியிருக்கிறார் என்று கூறிவிட்டு தோட்டத்தில் போய் எம்ஜிஆரை சந்தியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதே போல் தோட்டத்தில் சந்தித்த வாலியிடம் எம்ஜிஆர் நீ முகமூடி போடாமல் உண்மையான முகத்தோடு என்னோடு பேசிய வார்த்தைகளை மறக்க முடியவில்லை. இந்த தைரியத்தை பாராட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று காலை உணவோடு வாலியை உபசரித்திருக்கிறார் எம்ஜிஆர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top