திரும்பவும் ஒரு ’காதலுக்கு மரியாதையா’? விஜயின் நடிப்பில் சூப்பரான லவ் ஸ்டோரி...இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்...
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஆந்திராவில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்த படத்தை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் இணைய இருக்கிறார். இது பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. வாரிசு படத்தை தாண்டி அடுத்த படமான லோகேஷுடன் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதையும் படிங்கள் : திரிஷாவை கண்டு நொந்து கொண்ட தயாரிப்பாளர்கள்..! அப்படி என்ன பண்ணுச்சு அம்மணி...
இந்த நிலையில் ஸ்டைலிஷான சார்மிங்கான இயக்குனர் தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் இயக்கத்தில் புதுமையான லவ் ஸ்டோரி படம், ஆக்ஷன் திரில்லர் படம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் நடிகர் விஜயை வைத்து ஏற்கெனவே படமாக்கப்பட்ட படம் யோகன்: அத்தியாயம் ஒன்று.
இதையும் படிங்கள் : ரஜினிக்கே டஃப் கொடுக்கும் யோகிபாபு..ஜெய்லர் படத்தின் புதிய அப்டேட்...!
ஆனால் சில பல காரணங்களால் படம் பாதியிலயே கைவிடப்பட்டது. இந்த நிலையில் அவரின் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் அவரை பேட்டியில் சந்தித்த போது என்னிடம் விஜய்க்காக சூப்பரான லவ் ஸ்டோரி கதை இருக்கு. அவருக்கும் விருப்பம் என்றால் நான் ரெடி. மற்றும் அவர் தற்போது ஆக்ஷன் கதை கலந்த படத்திலயே கவனம் செலுத்தி வருவதால் லவ் ஸ்டோரி கதை கொஞ்சம் அவருக்கு வித்தியாசமாக இருக்கும். மக்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் என கூறினார்.