என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

Published on: April 23, 2024
fahad
---Advertisement---

Rajini Fahad Fasil: சமீபகாலமாக பல முன்னனி நடிகர்கள் வில்லன்களாக அவதரித்து கலக்கி வருகிறார்கள். இப்பொழுது மாஸ் ஹீரோக்களாக இருக்கும் ரஜினி, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் வில்லன்களாக இருந்து ஹீரோக்களாக மாறியவர்கள். அதே ஒரு டெக்னிக்கைத்தான் இப்போது சினிமா பின்பற்றி வருகிறது. இதனால் வில்லன்களாக மாஸ் காட்டி வந்த மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், கபாலி உட்பட பல நடிகர்கள் காமெடியன்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் வில்லன்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். பகத் பாசில் தமிழ் படங்களில் இதற்கு முன் நடித்தாலும் விக்ரம் படத்திற்கு பிறகு பகத் பாசிலின் புகழ் உயர்ந்து விட்டது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பகத் பாசிலுக்கு என ஒரு தனி இடமே இருக்கிறது. விக்ரம் படத்திற்கு பிறகு மாமன்னன் திரைப்படத்தில் ஒரு கொடூர வில்லனாக மிரட்டினார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் படத்தில் மிளகாய்தூள் தூவும் காட்சியை இப்படித்தான் எடுத்தோம்… அட செம ட்ரிக்கா இருக்கே!

இந்த இரு படங்கள்தான் பகத் பாசிலின் பெருமையை தமிழ் ரசிகர்கள் அறிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக பகத் பாசில் ரஜினியுடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரம் என்றே சொல்கிறார்கள். ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பகத் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் படத்தில் மிளகாய்தூள் தூவும் காட்சியை இப்படித்தான் எடுத்தோம்… அட செம ட்ரிக்கா இருக்கே!

படப்பிடிப்பில் ரஜினியை பார்த்ததும் பூரிப்பில் பகத் பாசில் சார் கண்டிப்பாக நீங்க என் படத்தை பார்க்கனும் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி உங்க படத்தை பார்க்கனும்னு அவசியமில்லை. உங்களை பற்றி நன்றாகவே தெரியும் என ரஜினி கூறினாராம். ஆனால் விக்ரம் , மாமன்னன் போன்ற படங்களில் பகத் நடிப்பை ரஜினி பார்த்திருக்கிறாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.