தோற்றம் என்னய்யா தோற்றம்...? என்னை மாதிரி இருக்காங்களா-னு தமிழ் நடிகர்களுக்கு சவால் விடும் ஃபகத்...!
மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன் என போற்றப்படுபவர் நடிகர் ஃபகத் ஃபாஸில். ஆரம்ப காலங்களில் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியதால் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்று திரும்பினார். ஆனால் அவரின் மனமோ திரையுலகை சுற்றியே இருந்ததால் மேலும் மேலும் முயற்சியோடு போராடினார்.
தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், புஷ்பா போன்ற படங்களில் நடித்து தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அவர் நடிப்பது எந்த மாதிரியான படங்களாக இருந்தாலும் சரி, காதல், திரில்லர், நகைச்சுவை என எந்த மாதிரியான கதையம்சம் கொண்டதாக இருந்தாலும் சரி ஒன்றை மட்டும் தான் உற்று நோக்குவாராம். அது நம்பகத்தன்மை.
இதையும் படிங்கள் : கணக்கு டீச்சரா இருந்துட்டு உனக்கு எதுக்கு மூணு ஹீரோயின்…? விக்ரமை கலங்கடித்த பத்திரிக்கையாளர்…!
இப்படி தன் மூச்சே சினிமாதான் என வாழ்ந்து கொண்டிருக்கும் ஃபக்த்தின் கெரியரில் முக்கிய திருப்புமுனையாக இருந்த படம் அவர் நடித்த சுலைமான் மாலிக் என்ற திரைப்படம். இதுவரை தன் வயதை தாண்டி எந்த ஒரு படத்திலும் மூத்த வயதை உடைய கதாபாத்திரத்தில் நடித்ததில்லையாம். ஆனால் மாலிக் படத்தில் நடித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்த ஒரு சில படங்களை தவிர மற்ற எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான லுக்கை வைத்து வெவ்வேறு கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து தன் அசாத்திய நடிப்பால் அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் வெவ்வேறானவை என நம்ப வைத்து விடுகிறார்.
இதையும் படிங்கள் : நடிகையை ரவுண்டு கட்டிய ரவுடிகள்….வேட்டியை மடிச்சிக்கட்டி துவம்சம் செய்த கேப்டன்….
இப்படி பட்ட நடிகர்கள் நம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்களா? என கேட்டால் குறைவு தான் என கோடம்பாக்கத்தில் சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில் பிரம்மாண்டம், தோற்றத்தில் புதுமை என இதன் பாதையை நோக்கி போகும் பெரிய நடிகர்கள் கதையின் முக்கியத்துவத்தை உணர மறந்து விடுகிறார்கள் என்றே கூற வேண்டும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர், கதையில் அந்த நம்பகத்தன்மை இருந்தால் ஹீரோவோ வில்லனோ எது இருந்தாலும் நடிப்பதற்கு தயாராகி விடுவாராம். ஆனால் நம் தமிழ் சினிமா நாயகர்கள்?