என்னது..? ஆண்ட்ரியாவின் வலையில் ஃபகத்தா...? இது என்ன புது உருட்டா இருக்கு...!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பாடகியாக அறிமுகமாகி இன்று பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் பிசாசு 2 படம் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவரை மலையாள நடிகர் ஃபகத் பாசில் விரும்பியதாக இப்பொழுது செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது நடந்தது 6 வருடங்களுக்கு முன்பு. அப்போது ஆண்ட்ரியாவும் ஃபகத் பாசிலும் ஒரு மலையாள படத்தில் ஜோடியாக நடித்திருந்தனராம்.
அப்போது தான் ஃபகத்திற்கு ஆண்ட்ரியாவை பிடித்துப் போனதாம். ஆனால் ஃபகத் அப்பொழுது சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்ததனால் ஆண்ட்ரியா இவரை தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. அதன் பின் பெங்களூர் டேய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ஃபத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழிலும் வேலையில்லாதவன் படத்தில் கனமான நெகடிவ் ரோலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் நஸ்ரியாவுடன் திருமணம் , விக்ரம் படத்தின் அமீர் கதாபாத்திரம் இன்று திரையுலகமே போற்றும் நடிகராக வளர்ந்து விட்டார். ஆனால் ஆண்ட்ரியாவிற்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் போராடி வருகிறார். இந்த செய்தி தான் இப்பொழுது வைரலாகி வருகிறது.