பாத்ரூமில் பகத்பாசில் செஞ்ச வேலை!.. அதிர்ந்து போன நஸ்ரியா.. நடந்தது இதுதான்!...
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மலையாள நடிகர்களின் ஆதிக்கம் சமீப காலமாக இருந்து கொண்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமாக கருதப்படுபவர் நடிகர் பகத் பாசில். இவர் பிரபல திரைப்பட இயக்குனரான பாசிலின் மகன். தமிழில் விஜய்யை வைத்து மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான காதலுக்கு மரியாதை திரைப்படத்தை இயக்கியவர் தான் பாசில்.
முதல் கோணல் முற்றிலும் கோணல்
பகத் பாஸில் முதலில் நடிக்க வந்தபோது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார். 2002 ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் தன் தந்தை இயக்கிய கையெத்தும் தூரத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்தை கேரளாவை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு காரணம் பிரபல இயக்குனரான பாசில் மகன் எப்படி நடித்திருக்கிறார் என்பதை காண்பதற்காக.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பகத் பாசில் நிறைவேற்ற வில்லை. முதல் படமே படுதோல்வி அடைந்தது. அவரும் நடிப்பில் அந்த அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு நடிப்பை ஸ்லிம் இன்ஸ்டியூட்டில் கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் யார் என்பதை நிரூபிக்க தொடங்கினார்.
அதிர்ச்சி ஏற்படுத்திய திருமணம்
மேலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நஸ்ரியாவை திடீரென திருமணம் செய்து கொண்டு ஒட்டுமொத்த சினிமாவிற்கும் ஷாக் கொடுத்தார் பகத் பாசில். இருவரும் சேர்ந்து பெங்களூர் நாட்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சமீபகாலமாக பகத் பாசிலின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அதுவும் விக்ரம், புஷ்பா போன்ற படங்களில் இவரின் அபார நடிப்பை பார்க்க முடிந்தது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் பாசிலின் நடிப்பை தான் அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் பகத் பாசிலின் ஒரு ரகசியத்தை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :அந்த சீன் நடிக்கிறேன்.. சாப்பாட்டுல இது வேண்டாம்!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா சிவாஜி?..
ஆனால் இதை முன்பே ஒரு மேடையில் நஸ்ரியா கூறியதாம். தன் கணவரான பகத்திடம் தான் ஆச்சரியப்பட்ட விஷயம் என்ன என்பதை மேடையில் நஸ்ரியா கூறினாராம். வீட்டில் இருக்கும்போது திடீரென பாத்ரூமில் இருந்து பகத் கத்துகிற சத்தம் கேட்டதாம். அப்பொழுதுதான் அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த சமயமாம்.
பயந்து போன நஸ்ரியா
அந்த நேரத்தில் நஸ்ரியாவிற்கு என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லையாம். அதன் பிறகு தான் புரிந்ததாம் பகத் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரமாகவே இருந்திருக்கிறார் என்று. இதே ஒரு பழக்கம் தான் ரகுவரனுக்கும் இருந்தது. எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அப்படியே மாறி விடுவார் ரகுவரன். அதேபோல ஒரு குணாதிசயத்தை பெற்றவர் தான் பகத் பாசில்.
இதைப் புரிந்து கொண்ட நஸ்ரியா பகத்திடம் சூட்டிங் முடிந்து விட்டால் அதை செருப்பு கழட்டுகிற மாதிரி வெளியேவே கழட்டி வைத்து விட வேண்டும். மறுபடியும் இந்த மாதிரி செய்தால் மனநல மருத்துவரிடம் கொண்டு போய் காட்டுவதை விட வேறு வழி இல்லை. அது மட்டும் இல்லாமல் இதை பத்திரிக்கையாளரிடமும் நான் கூறி விடுவேன் என்று பகத்திற்கு நஸ்ரியா எச்சரிக்கை விடுத்தாராம். அதன் பிறகு தான் பகத் நடிப்பு வேறு குடும்பம் வேறு என புரிந்து நடந்து கொண்டாராம். இதை செய்யாறு பாலும் கூறினார்.
இதையும் படிங்க :நான் உயிரோடதான் இருக்கேன்!.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க!.. சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை உருக்கம்..