அடுத்த பார்த்திபன்.. நஷ்ரியா புருஷன் தான்... புது படத்திற்காக என்ன செய்ய போறார் பாருங்க...

தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு அதில் வெற்றியும் கண்டு வருகிறார் இயக்குனர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில், கதை இல்லாமல் ஒரு படம், ஒரு நடிகர் மட்டும் நடித்து ஒரு படம், ஒரே ஷாட்டில் ஒரு படம் என அடுத்தடுத்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர் இயக்கத்தில் இவர் மட்டுமே நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளை பெற்றது. ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக சிறப்பு தேசிய விருதையும் பார்த்திபன் வாங்கி இருந்தார்.
தற்போது இதே போல மலையாளத்தின் ஒரு வித்தியாசமான முயற்சியை நஷ்ரியா கணவரும் நடிகருமான ஃபகத் பாசில் கையாள உள்ளாராம். அதாவது அந்த திரைப்படத்தில் அவர் மட்டுமே நடிக்க உள்ளாராம். ஒத்த செருப்பு திரைப்படத்தில் கேமரா ஒரே இடத்தில் இருக்கும். அதில் பார்த்திபன் வேறு வேறு விதமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார்.
இதையும் படியுங்களேன் – விஜய்க்கு அந்த விஷயம் ரெம்ப பிடிக்கும்.. ஆனால், செய்யமாட்டார்… பிரபல இயக்குனர் கூறிய சீக்ரெட் தகவல்…
ஆனால், இந்த திரைப்படத்தில் கேமரா ஃபகத் பாசில் உடன் பயணிக்கும். அதன் மூலமே இரண்டு மணி நேரம் கதை சொல்ல போகிறாராம். இந்த வித்தியாசமான முயற்சியை நஸ்ரியா கணவர் ஃபகத் பாசில் மேற்கொள்ள உள்ளாராம்.