நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டாதவர்களே கிடையாது. அவரது கண்கள் கூட நடிக்கிறது. ஹீரோவாக, வில்லனாக எந்த கேரக்டராக இருந்தாலும், பின்னி பெடலெடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் அவரின் நடிப்பை பார்த்து ஊரே கழுவி ஊற்றியது என்பது உங்களுக்கு தெரியுமா? அவரின் முதல் படத்தை பார்த்துவிட்டு, தயவு செய்து இனி படத்தில் நடிக்காதே என்று கூறினார்களாம்.
இது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் ஃபகத் பாசிலின் முதல் படம் கையெத்தும் தூரத்து. இந்த படம் கடந்த 2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இந்த படத்தை அவரது தந்தை பாசில் தான் இயக்கியிருந்தார். என்ற இந்த படம் வெளியானவுடன் அதனை பார்த்தவர்கள், அவரின் நடிப்பை கழுவி ஊற்றினார்கள்.
இதையும் படிங்க- மரணத்தை முன் கூட்டியே கணித்த சுருதியின் கணவர்! உருக வைத்த அந்த பதிவு
தயவு செய்து நடிப்பதை நிறுத்திவிடு, உன் தந்தையின் பெயரை கெடுக்காதே என்று பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஃபகத் பாசில், நொந்துபோய், நியூ யார்க் ப்ளிம் அகாடமியில் 6 வருடங்கள் பயிற்ச்சி பெற்றுவிட்டு வந்து 8 ஆண்டுகள் கழித்து அடுத்த படத்தை நடித்தார்.
அதிலிருந்து அவரது நடிப்பை பாராட்டாதவர்களே கிடையாது. தற்போது தமிழ் சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்று ரத்னவேல் என்ற கொடூர வில்லனாக அவர் நடித்தாலும், ஹீரோவை விட அதிகம் பேசப்படும் அளவிறக்கு அவரின் நடிப்பு மிக சிறப்பாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதையும் படிங்க- அவன மாதிரி என்னால நடிக்க முடியாது!… மணிரத்னம் படம் பார்த்து ஒப்பனா சொன்ன நடிகர் திலகம்!…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…