Connect with us

தமிழ் நடிகையுடன் காதல் வலையில் விழுந்த ஃபகத் பாசில்… அப்போ நஸ்ரியா நிலைமை!

Cinema History

தமிழ் நடிகையுடன் காதல் வலையில் விழுந்த ஃபகத் பாசில்… அப்போ நஸ்ரியா நிலைமை!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஃபகத் பாசில் தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் ஃபகத் பாசில், மலையாளத்தில் அதிக படங்கள் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா, விக்ரம் படங்களில் அவர் நடிப்புக்கு வெகுவான பாராட்டுகள் கிடைத்தது. பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் தான் ஃபகத். 2014ம் ஆண்டு தனது சக நடிகையான நஸ்ரியாவை ஃபகத் பாசில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் கணவன், மனைவியாக நடித்திருந்தனர்.

ஃபகத் பாசில்

அப்போதில் இருந்து இருவருக்கும் காதல் உருவானதாக கூறப்படுகிறது. நஸ்ரியாவை விட 11 வயது மூத்தவர் ஃபகத் இது இவர்கள் திருமண சமயத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இருந்தும் இருவரும் தங்கள் காதலில் தீவிரமாக இருந்ததை அடுத்து திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: ஆண்ட்ரியா நிர்வாண காட்சி எடுத்தேன்னு யார் சொன்னது.?! அந்தர் பல்டி அடித்த சர்ச்சை இயக்குனர்.!

இதெல்லாம் தெரிந்த சேதி தான். ஆனால், ஃபகத் முதன்முதலில் காதலித்தது தமிழ் நடிகை ஒருவரை தானாம். 2013ம் ஆண்டு ஆண்ட்ரியாவுடன் ஒரு படம் இணைந்து நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாம். அதிலும், ஆண்ட்ரியாவின் பாடல் திறனையும், அவரின் நகைச்சுவை உணர்வுக்கும் ஃபகத் அடிமையே ஆகிவிட்டாராம். இதை தொடர்ந்து அவரிடம் தன் காதலை சொன்னது மட்டுமல்லாமல், இன்னொரு விஷயத்தையும் செய்திருக்கிறார். இந்த காதல் மீடியாவில் சர்ச்சையாகி விட கூடாது என்பதற்காக அவர்களை அழைத்து தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக போட்டு உடைத்து விட்டாராம்.

ஆனால், இதற்கு ஆண்ட்ரியாவோ அவர் தான் காதலிக்கிறார். எனக்கு இதில் எந்த விருப்பமும் இல்லை என பதிலடி கொடுத்தாராம். அதனுடன் அந்த காதல் முறிந்து விட்டதாம். இதை தொடர்ந்தே, ஃபகதிற்கு நஸ்ரியாவின் மீது காதல் மலர்ந்ததாம். இதுவும் ப்ரேக் அப்பில் முடிந்துவிட கூடாது என்பதற்காக அவர் உடனே திருமணமும் செய்து வையுங்கள் என பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்து விட்டார். பயம் இருக்குமுல!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top