சினிமாவை டைனிங் டேபிளில் ஏன் பேசுறாங்கன்னு புரியல, அந்த இடம் குடும்பத்துக்கான இடம், சாப்பிடக் கூடிய இடம் என பகத் ஃபாசில் பளிச்சென தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
மலையாள நடிகரான பகத் ஃபாசில் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ்க் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தமிழ்நாடு முழுவதும் பெற்றுத் தந்துள்ளது.
இதையும் படிங்க: காத்தடிச்சு தூக்கிய குட்டி பாவாடை!.. ஜெயம் ரவி ஜோடி மானமே போயிருக்கும்!.. என்ன ஆச்சு தெரியுமா?..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்த அந்தப் படத்தில் வில்லனாக நடித்த பகத் ஃபாசிலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மாரிசெல்வராஜ் ஆடிப் போய் இருப்பார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான பகத் ஃபாசில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் தற்போது வேட்டையன் என பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..
மலையாளத்தில் அவர் நடிப்பு சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் 75 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவை டைனிங் டேபிளில் எல்லாம் பேசத் தேவையில்லை. அது ஒரு பார்ட் ஆஃப் லைஃப் தான். வாழ்க்கை பெரிது, அதை உங்கள் குடும்பத்துடன் பல விஷயங்களை பேசி ரசித்து வாழ வேண்டும்.
தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்க்கும்போதும் அதைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வரையில் வேண்டுமானால் அதைப் பற்றி பேசலாம். ஆனால் இன்றைய காலத்தில் இளைஞர்கள் மொத்தமாகவே சினிமா தான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. அதைக் கடந்த வாழ்க்கை பெரியது அதைப் பற்றி இளைஞர்கள் யோசிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…