இனிமே நீங்க உருட்டலாம்… அஜித் அந்த படத்தை மிஸ் பண்ணிட்டார்… விக்னேஷ் சிவன் சொன்ன விஷயம்…

Published on: November 29, 2024
Ajithkumar_Vignesh shivan
---Advertisement---

Vignesh Shivan: அஜித்குமார் தன்னுடைய படத்தில் நடிப்பதை மிஸ் செய்துவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனராக கோலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன். காதலை காமெடியாக சொல்லி ரசிகர்களை கவர வைப்பதில் கில்லாடி. தொடர்ச்சியாக காதல் படங்களை எடுத்து ஹிட்டடித்தவர்.

இதையும் படிங்க: லப்பர் பந்து பட நடிகை தட்டி தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. அப்போ திரிஷா?.. இது என்ன டுவிஸ்ட்டு..!

துணிவு படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எக்கசக்கமான கதைகளை அஜித்திடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்லிய கதைகள் அஜித்துக்கு பிடிக்காமல் போக உடனே அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டனர்.  

இதற்காக விக்னேஷ் சிவனுக்கு கோலிவுட் ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வந்தனர். ஒரு இயக்குனர் கேரியரையே கெடுத்துட்டாரே எனவும் பலரும் புலம்பி கொண்டிருந்தனர். ஆனால் திடீரென தனுஷுக்கு எதிரான நயன் அறிக்கையில் தற்போது விக்னேஷ் சிவனுக்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்ததுள்ளது.

இதையும் படிங்க: சர்தார் 2-ல எஸ்ஜே சூர்யா இப்படி நடிக்கிறாரா?. எப்படி யோசிச்சுருக்காரு பாருங்க டைரக்டர்..

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் சில நாட்கள் கழித்து பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய பேட்டி ஒன்றில் ஃபகத் பாசில் நடிப்பில் ஆவேஷம் திரைப்படம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இப்படத்தினை போல தான் தானும் ஒரு படத்தை அஜித்துக்கு உருவாக்கி வைத்திருந்தேன். அது அவரின் கேரியரில் சிறந்த படமாக இருந்து இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.