ஒன்னு குறைச்சலா இருக்கு! இத விட என்ன வேணும்? ‘புஷ்பா’ படம் பற்றி இப்படி சொல்லிட்டாரே பகத்

by Rohini |
fahat
X

fahat

Actor Fahat Fasil: கோலிவுட்டில் சமீப காலமாக எந்த ஒரு நடிகரின் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவே இல்லை. ஆனால் மற்ற மொழி நடிகர்களின் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அதை ரிலீஸ் செய்து அந்த படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒட்டுமொத்த கோலிவுட்டையே அல்லு தெறிக்க விட்ட திரைப்படமாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா.

இரண்டு பாகங்கள் கொண்ட இந்த படத்தின் முதல் பதிப்பு ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் பி சுகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது. அந்த படத்தில் அல்லு அர்ஜுன் ,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: இத ஒரு படமாவே எடுக்கலாமே? சூர்யா எந்த நேரத்தில் எப்படிப்பட்ட சூழலில் பிறந்தார் தெரியுமா?

இதில் போலீசாக நடித்திருந்தவர் பகத் பாஸில். மொட்டை தலையுடன் வில்லத்தனமான ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு பெரிய அளவில் புகழைப் பெற்றார். அதிலிருந்தே தொடர்ந்து விக்ரம் ,மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடமும் ஒரு நிலையான இடத்தை பெற்றார். பகத் பாசில் தற்போது ஒரு பேன் இந்தியா நடிகராக வளர்த்து நிற்கிறார்.

இந்த நிலையில் புஷ்பா படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் பகத் பாஸில். அது என்னவென்றால் புஷ்பா படத்தில் நடித்ததனால் மட்டுமே நான் பேன் இந்தியா நடிகராக உருவாகவில்லை என்ற கருத்தை பதிவிட்டு இருக்கிறார். இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இந்த படத்திற்கு முன்பு வரை பகத்பாஸில் என்றால் யார் என்ற அளவுக்கு தான் இருந்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தொட்டதெல்லாம் துலங்கியதற்கு அந்த ஒரு குணம்தான் முக்கிய காரணம்! பிரபலம் சொல்லும் ‘வாவ்’ தகவல்

ஆனால் புஷ்பா படத்தின் மூலமாகத்தான் அதுவும் அவர் பேசிய ஒன்னு குறைச்சலா இருக்கு என்ற வசனம் பட்டித் தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமானது. ஆனால் கடைசியில் இந்த படத்தின் மூலமாகத்தான் நான் பேன் இந்தியா நடிகராக மாறினேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போல அந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

Next Story