Home > Cinema News > எசமான் நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?!.. கடைசியில் இவர் படத்திலும் பஹத் பாசில்....
எசமான் நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?!.. கடைசியில் இவர் படத்திலும் பஹத் பாசில்....
X
மலையாளத்தில் வித்தியாசமான கதைகளில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். மற்ற நடிகர்கள் ஏற்க தயங்கும் கதாபாத்திரங்களை கூட அசால்ட்டாக செய்து விடுவார். எனவே, இவரை தேடி வித்தியாசமான வேடங்களே தொடர்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வரும் வித்தியாசமான படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழைப்பொறுத்தவரை சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சமந்தாவின் கணவராக நடித்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடிக்கவுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
Next Story