நீயும் சொல்லக்கூடாது.. நானும் சொல்லமாட்டேன்!.. பரிதாபத்தில் விடுதலை, பத்துதல படங்களின் நிலைமை!..

by Rohini |   ( Updated:2023-04-08 03:11:40  )
pathu
X

pathu thala

கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படங்கள் பத்து தல மற்றும் விடுதலை. விடுதலை பட ரிலீஸுக்கு முதல் நாளே பத்து தல படத்தின் ரிலீஸ் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரண்டு படங்களுமே படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் இருந்து வெளியாகும் வரை ஒரு ஹைப்பை உருவாக்கிக் கொண்டுதான் இருந்தன.

பத்து தல படத்தில் சிம்புவின் நடிப்பு ஒரு நிழல் உலக தாதாவை போல் இருந்ததால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்புக இருந்தன. இன்னொரு பக்கம் விடுதலை படத்தில் சூரி கதாநாயகன் என்று தெரிந்ததும் அதுவும் வெற்றிமாறன் படத்தில் அவர் என்ன பண்ணுகிறார் என்பதை காணவே விடுதலை படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.

இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கின்றன. ஆனாலும் வெளியான முதல் நாளே இரு படங்களுமே தங்களின் வசூலை மாறி மாறி உயர்த்திக் காட்டி தங்கள் பலத்தை நிரூபித்து வந்தன.

இதற்கிடையில் ஞாயிற்று கிழமை வரையிலும் ஓரளவு வசூல் வந்த நிலையில் திங்கள் கிழமையில் இருந்து வசூலில் ஒரே இறங்குமுகமாகத் தான் இருந்திருக்கின்றன இரு படங்களுக்கும். இதனிடையில் விடுதலை படத்தின் வெற்றிவிழாவையும் பத்து தல படத்தின் சார்பாக நன்றி கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் உண்மையிலேயே அப்படி ஒன்றும் சம்பவம் இல்லையாம். அதாவது வசூலில் சொல்லும் படியாக எந்த ஒரு சாதனையும் இரு படங்களுமே பெற வில்லையாம். போட்டிக்காக மாறி மாறி பொய்யான தகவலை பரப்பியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஏ.ஆர்.ரஹ்மானால் ரெக்கார்டிங்கை கேன்சல் செய்த டி.ராஜேந்தர்… என்னவா இருக்கும்?

இதற்கு முக்கியமான காரணம் ஒரு பக்கம் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் என முக்கியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதால் தான் நினைத்த வசூலை பெற முடியவில்லையாம்.

Next Story