ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை… நாயை வைத்து அவமானப்படுத்திய பிரபல நடிகர்… இதெல்லாம் ரொம்ப ஓவர்!!
“தினா”, “ரமணா”, “கஜினி”, “ஏழாம் அறிவு”, “சர்க்கார்”, “தர்பார்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் “கஜினி”, “ஹாலிடே”, “அகிரா” போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இந்தியாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தொடக்கத்தில் பிரபல கதாசிரியரான கலைமணியிடம் உதவியாளராக இருந்தார். அப்போது அவருக்கு இயக்குனர் மனோபாலாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதனை தொடர்ந்து “தினா”, “ரமணா” போன்ற திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ். இத்திரைப்படங்களை தொடர்ந்து முருகதாஸிற்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஆதலால் மனோபாலாவின் உதவியுடன் அப்போதுள்ள ஒரு பிரபல நடிகரைச் சென்று பார்த்தாராம்.
அந்த நடிகரிடம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை சொல்ல தொடங்கியபோது அந்த நடிகர் தனது வீட்டில் இருந்த நாய் குட்டிகளை கொஞ்சிக்கொண்டிருந்தாராம். பாதி கதையை சொல்லி முடித்தும் அந்த நடிகர் முருகதாஸை கவனிப்பது போல் தெரியவில்லையாம்.
ஒரு கட்டத்தில் முருகதாஸ் “என்ன சார், நான் கஷ்டப்பட்டு கதை சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா நாயை கொஞ்சிட்டு இருக்குறீங்க” என கேட்டாராம். அதற்கு அந்த நடிகர் “நீ சொல்லுகிற கதை நன்றாக இருந்தால் நான் ஏன் நாயை கொஞ்சப்போகிறேன்?” என கேட்டாராம். இதை கேட்டவுடன் முருகதாஸ் ஷாக் ஆகிவிட்டாராம்.
அப்போது அவருடன் வந்திருந்த மனோ பாலாவிற்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டதாம். முருகதாஸை அழைத்து அந்த நடிகரின் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாராம். அதன் பிறகுதான் சூர்யாவிடம் கதை சொல்ல முருகதாஸிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “கஜினி” என்ற மாஸ் ஹிட் திரைப்படமும் உருவாகியிருக்கிறது. இந்த சம்பவத்தை மனோ பாலா தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.