இன்று பிரபலமான நடிகர்கள் அன்று ஒரு சில பிரபலமான படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்று அப்போது நமக்குத் தெரியாது. சினிமாவில் அவர்கள் அடி எடுத்து வைத்த நேரம் என்பதால் நமக்குத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.
ஆனால் இப்போது அது தெரியவந்துள்ளது. அவர்களது போட்டோக்களைப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக உள்ளது. இவர்களா இந்த படத்தில் நடித்துள்ளார்கள் என்று எண்ணத் தோன்றும். அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன? அந்த பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போமா…
இயக்குனர் ஷங்கர்

1986ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான வசந்தராகம் படத்தில் தான் ஒரு காட்சியில் இயக்குனர் ஷங்கர் தோன்றுகிறார். அது எந்தக் காட்சி என்று நீங்களே படத்தைப் பார்க்கும் போது தெரிந்து விடும்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

1997ல் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் அவரை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் சூரி

நகைச்சுவையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கும் நடிகர் சூரி. இவர் இப்போது தான் பிரபலம்.
ஆனால் அப்போதே ஒரு பிரபலமான படத்தில் தலையைக் காட்டியுள்ளார். 2003ல் வெளியான வின்னர் படத்தில் வடிவேலு தோன்றும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் சூரி இருப்பதைப் பாருங்கள்.
நகைச்சுவை நடிகர் சந்தானம்

இன்று சந்தானம் சினிமாவில் படுபிசி காமெடி நடிகர். இவர் கதாநாயகனாக நடித்து வெளுத்துக் கட்டுகிறார்.
காதல் அழிவதில்லை. 2002ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தைப் பாருங்கள். இதில் கருணாஸின் நகைச்சுவை காட்சி இடம்பெறுகிறது. கூடவே சந்தானமும் கருணாஸின் பின்னால் நின்று பார்ப்பதைப் பாருங்கள்.
ஷாம்

நடிகர் ஷாம் அப்போதே இளையதளபதி விஜய் நடித்த குஷி படத்தில் தலையைக் காட்டி விட்டார். 2000ல் வெளியான இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பாடல்களும் செம ரகங்கள் தான்.
இந்தப்படத்தில் ஷாம் நடித்துள்ளார் என்றால் ஆச்சரியம் தான். அதெப்படி அவர் அந்தப்படத்தில் நடித்து இருப்பார் என்று நீங்கள் கேட்கலாம். ஏன் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் தைரியமாக பெட் கூட வைக்கலாம். நீங்கள் தான் ஜெயிப்பீர்கள். உங்களுக்கு ஆதாரம் தான் இந்த படம். விஜயின் அருகில் நிற்கும் நண்பர்களில் ஒருவர் தான் ஷாம்.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

அந்தக்காலத்திலேயே கவுண்டமணி நடித்துள்ளார். 80களில் தமிழ்சினிமாவைக் கலக்கியவர் கவுண்டமணி என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் இவர் 70லேயே ஒரு படத்தில் தலையைக் காட்டியுள்ளார். தேனும் பாலும். இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் தோன்றும் ஒரு காட்சியில் நிற்கிறார் கவுண்டமணி.
