தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீனாவிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து கொண்டே வருவதால், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு , வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு என பலவற்றிற்க்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், தற்போது மீண்டும் அதிகரித்து கொண்டே வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. மீண்டும் பல்வேறு திரை பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உலக நாயகன் கமல் ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடிகர் அருண் விஜய் கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருப்பாதகவும், தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தற்போது நடிகை மீனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’2022 ஆம் ஆண்டில் முதல் விருந்தினராக எங்கள் இல்லத்திற்க்கு கொரோனா வந்துள்ளது என்றும், அதற்க்கு எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் பிடித்துள்ளது எனவும் ஆனால், நான் அதை இருக்க விட போவதில்லை என்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் எனவும் பதிவிட்டுள்ளார். அவரது மகள் நைனிகாவிற்க்கும் தொற்று ஏற்ப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், தெறி படத்தில் அவர் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்து தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…