“நல்ல வேலை சிவாஜிக்கு அங்கீகாரம் கிடைக்கல இல்லைன்னா”… திடீரென கொந்தளித்த பிரபல மருத்துவர்… என்னவா இருக்கும்!!
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக விளங்கியவர். தான் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான ஸ்டைலில் வித்தியாசம் காண்பித்தவர் சிவாஜி கணேசன்.
இந்த நிலையில் பிரபல மருத்துவரும் சிவாஜியுடன் நெருங்கி பழகியவருமான டாக்டர்.காந்தராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்பட்டியில் “சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லையே ஏன்?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காந்தராஜ் “நான் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தபோது வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவர் பயிற்சிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு முறை கீழ் வானம் சிவக்கும் என்ற சிவாஜி கணேசனின் படத்தை பார்க்கச் சென்றனர்.
படம் பார்த்த அடுத்த நாள் என்னிடம் வந்து ‘அந்த படத்தில் ஒருவர் டாக்டராக நடித்திருந்தார் அவரை நாங்கள் நேரில் சந்திக்கவேண்டும். மிகவும் அசாத்தியமாக நடித்திருந்தார் அவர். நிச்சயமாக நாங்கள் அவரை பார்க்கவேண்டும்’ என்று ஒற்றைக் காலில் நின்றார்கள்.
இதையும் படிங்க: “நான் என்ன அப்படிப்பட்டவனா?”… பாலச்சந்தர் சொன்ன விஷயத்தால் மனம் நொந்துப்போன கவிஞர் வாலி…
அதன் பின் அவர்களை சிவாஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அன்று சிவாஜி கணேசன் ஊரில் இல்லை. இதுதான் அங்கீகாரம். தமிழ் பட உலகத்தை பற்றியே தெரியாத வெளிநாட்டினர் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வியந்து அவரை பார்க்கவேண்டும் என்றார்களே அதுதான் சிறந்த அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை விடவா மத்திய அரசு கொடுக்கும் அங்கீகாரம் பெரிதாக இருக்கப்போகிறது” என அப்பேட்டியில் கூறியிருந்தார்.