விநியோகஸ்தர்களை அலறவிடும் உதயநிதி… “அவுங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்”… பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல திரைப்படங்களை தனது நிறுவனத்தின் கீழ் வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி ஸ்டாலின், பல தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வெளியிடுகிறார்” என அவரை குறித்து பல வதந்திகள் பரவியது. ஆனால் அது போன்ற விஷயங்களில் எல்லாம் அவர் செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் “ரெட் ஜெயன்ட் நிறுவனம் இவ்வாறு பல திரைப்படங்களை வெளியிடுவதால் மற்ற விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகிறார்களா?” என ஒரு கேள்வியை எழுப்பினார்.
இதையும் படிங்க: “பொன்னியின் செல்வன் எனக்கு திருப்தியாக இல்லை”… மணி ரத்னத்திடமே தைரியமாக போட்டு உடைத்த ஜெயம் ரவி…
அதற்கு பதிலளித்த அந்தணன் “நிச்சயமாக விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய விநியோகஸ்தர்கள் எல்லாம் இப்போது தயங்கி உட்கார்ந்திருக்கின்றனர்.
திரையரங்கிற்கும் உதயநிதிக்குமான வணிக ரீதியான உறவு பாலமாக ஒன்று உள்ளது. இதற்கு நடுவில் இருக்கும் விநியோகஸ்தர்கள் தற்போது வேலை இல்லாமல் இருக்கின்றனர்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “ஓரு விதத்தில் இது மிகவும் நல்ல விஷயம்தான். ஒரு காலத்தில் இந்த விநியோகஸ்தர்கள் எல்லாம் தமிழ் சினிமாவை எப்படி ஆட்டிப்படைத்தார்கள் என்பதை சினிமாவில் உள்ளவர்களிடம் கேட்டால் கண்ணீர் விடுவார்கள். அந்த அளவிற்கு அராஜகங்கள் நடந்தது.
இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக திரையரங்குகளிடமே ஒப்பந்தம் போடுவதால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகச் சரியான லாபமும் வசூலும் வந்துவிடுகிறது. ஆனால் இதற்கு முன்பு இருந்த விநியோகஸ்தர்கள் கணக்குகளை சரியாக காட்ட மாட்டார்கள். ஒரு வகையில் இது தமிழ் சினிமாவிற்கு நல்லதுதான்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.