Actor Rajini: இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து தன் வழி தனி வழி என்று அன்றும் இன்றும் என்றென்றும் சூப்பர் ஸ்டாராகவே இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள். என்பதுகளில் இருந்து இன்று வரை ரஜினிக்கு உண்டான அந்த கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். ரஜினியின் சிறப்பு அம்சமே அவருடைய ஸ்டைல் தான். நின்றால் ஸ்டைல் நடந்தால் ஸ்டைல் சிரித்தால் ஸ்டைல் என எல்லா வித செயல்களிலும் அவருடைய ஸ்டைலும் கூடவே வெளிப்படும். அதனாலேயே அவர் சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பெற்று இன்று இந்திய அளவில் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க:சிவாஜியிடம் கடைசியாக ஏதோ சொல்ல ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. புதைந்து போன ரகசியம்!…
73 வயதை கடந்தாலும் இன்றைய தலைமுறை நடிகர்களுடன் டப் கொடுக்கும் வகையில் அவருடைய படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரஜினி படங்களுக்கு என ஒரு மாஸ் ஓப்பனிங் இன்று வரை இருந்து வருகிறது. அவர் நடித்த படங்கள் தான் அதிக அளவில் பிசினஸும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரஜினி தற்போது வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 2 படமும் அவருடைய வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. இதுபோக அவரை வைத்து படம் பண்ணுவதற்கு கிட்டத்தட்ட நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையில் நிற்பதாக சொல்லப்படுகிறது. அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம். வேஸ் நிறுவனம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவரை வைத்து படம் பண்ணுவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜயின் அரசியல் அஜித்தை இந்தளவு மாத்திடுச்சா? இறங்கி வேலை பார்க்கும் தல
இதில் மூன்று நிறுவனங்களுக்கு தான் ரஜினி கால்ஷீட் கொடுக்கப் போவதாக தெரிகிறது. இந்த நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் வெளியேறப் போகிறது. அதனால் அந்த நிறுவனம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…