Connect with us

அஜித்குமாருக்கு ஆலோசகரான பிரபல அரசியல் விமர்சகர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Ajith and Rangaraj Pandey

Cinema News

அஜித்குமாருக்கு ஆலோசகரான பிரபல அரசியல் விமர்சகர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

அஜித்குமார் தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்குத்தான் வெளிவருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளதாக தெரிய வருகிறது.

இதில் “துணிவு” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகியோரின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் “துணிவு” திரைப்படத்திற்காக வெறிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

Ajith Kumar

Ajith Kumar

சினிமாத்துறையில் பொதுவாக ஒவ்வொரு நடிகருக்கும் ஆலோசனையாளர் என்று ஒருவர் இருப்பது வழக்கம். எந்த கதையை தேர்ந்தெடுக்கலாம், எந்த கதையை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதில் நடிகர்கள் கவனமாக செயல்பட்டாலும், அவர்களுக்கு வரும் குழப்பங்களை தீர்த்து வைப்பது ஆலோசகர்கள்தான். தமிழின் டாப் நடிகர்கள் பலருக்கும் ஆலோசகர்கள் உண்டு.

Rangaraj Pandey

Rangaraj Pandey

இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரும் நிருபருமான ரங்கராஜ் பாண்டே, அஜித்குமாரின் ஆலோசகராக இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரங்கராஜ் பாண்டே அஜித்குமார் நடித்த “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Nerkonda Paarvai

Nerkonda Paarvai

இதனை தொடர்ந்துதான் தற்போது ரங்கராஜ் பாண்டே, அஜித்குமாருக்கு ஆலோசகராக இணைந்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top