20 வருடம் கழித்து மீண்டும் வரும் ‘அழியாத கோலம்’... சீரியல் ரசிகர்களுக்கு இருக்கு செம ட்ரீட்!..
சினிமாவை விட சின்னத்திரையில் தான் நடிகர் , நடிகைகளின் மோகம் அதிகரித்து விட்டது. ஏனெனில் சின்னத்திரை மட்டும் தான் சாதாரண மக்களின் வாழ்க்கையோடு வாழ்க்கையாக ஒன்றாக பயணித்துக் கொண்டிருப்பது. மேலும் குடும்பம் குடும்பமாக கொண்டாடக்கூடிய ஒரு பொழுது போக்கு அம்சமாக சின்னத்திரை விளங்குகிறது.
இன்று ஏகப்பட்ட சேனல்கள் பெரும்பான்மையான தொடர்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு காலத்தில் சினிமாவிற்கு போட்டியாக சின்னத்திரை தொடர் விளங்குகிறது என்ற காரணத்திற்காகவே சிவாஜி சீரியலில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
அதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்து மீண்டும் கௌரவம் என்ற தொடரில் பரத் என்ற இயக்குனர் நடிக்க வைத்தார். அந்த அளவுக்கு சீரியல் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. சின்னத்திரையில் பல ஹிட் தொடர்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன.
அதில் சில குறிப்பிட்ட தொடர்கள் காலத்தால் அழியாத வகையில் நிலைத்து நிற்கும். உதாரணமாக சித்தி, மெட்டி ஒலி, அண்ணி, அலைகள், கோலங்கள் போன்ற பல தொடர்களை குறிப்பிடலாம். ஆனால் குறிப்பிட்ட எல்லா தொடர்களும் சினிமாவைத்தாண்டி மாபெரும் வெற்றி அடைந்த தொடர்களாகும்.
இந்த நிலையில் தேவயாணி நடிப்பில் வெளிவந்த சீரியல் ‘கோலங்கள்’. இந்த சீரியலை இயக்கியவர் திருச்செல்வம். இப்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான கதை அவரிடம் தயாராக இருக்கின்றதாம். சரியான தயாரிப்பு நிறுவனம் வந்தால் கண்டிப்பாக கோலங்கள் சீரியலின் இரண்டாம் பாகம் மக்களை தேடி வரும் என்று கூறியிருக்கிறார்.
அந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆதியாக வரும் கதாபாத்திரம் இன்றளவும் நம்மை மிரட்ட வைக்கிறது. அதுவும் போக தேவயாணிக்கு தோழியாக தீபா வெங்கட் அவருடைய கதாபாத்திரத்தில் ரசிகர்களை உறைய வைத்திருப்பார். கூடிய சீக்கிரம் வீட்டு வாசலில் கோலமிட காத்திருங்கள்.