Categories: Cinema History Cinema News latest news

சாவித்திரியை பார்க்க இவர்தான் அனுமதி கொடுக்கனுமாம்… ஜெமினி கணேசனாலயே முடியாதாம்… என்னப்பா சொல்றீங்க!!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த சாவித்திரி, தனது சிறப்பான நடிப்பாற்றலாலும் வள்ளல் குணத்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். சாவித்திரியும் ஜெமினி கணேசனும் காதலித்து திருமணம் செய்துகொண்ட செய்தியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

சாவித்திரி “பிராப்தம்” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். அத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது. மேலும் அத்திரைப்படத்தின் தோல்வி சாவித்திரியை நிலைகுலையச் செய்தது.

Savitri

“பிராப்தம்” படத்தை சாவித்திரி தயாரிக்க முடிவு செய்தபோதே ஜெமினி கணேசனுக்கு அதில் ஈடுபாடு இல்லை. ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் இந்த படம் சரிவராது என பல முறை கூறிபார்த்தாராம். ஆனால் ஜெமினி கணேசனின் பேச்சை கேட்காமல் “பிராப்தம்” திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கினாராம் சாவித்திரி.

“பிராப்தம்” திரைப்படத்தின் படுதோல்வியை தொடர்ந்துதான் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து இருவரும் தனி தனியே பிரிந்து வாழத்தொடங்கினார்கள்.

இதையும் படிங்க: ஓடிப்போன காதலனால் மார்க்கெட்டை இழந்த டாப் நடிகை… அடக்கொடுமையே!!

Savitri and Gemini Ganesan

இந்த நிலையில் பிரபல சமூக விமர்சகரான டாக்டர்.காந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்திரபாபுவுக்கும் சாவித்திரிக்கும் இடையே இருந்த உறவு குறித்து ஒரு அரிய தகவலை பதிவு செய்துள்ளார்.

சந்திரபாபுவுக்கும் சாவித்திரிக்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு இருந்ததாம். ஒரு கட்டத்தில் சந்திரபாபுவின் அனுமதியை கேட்டுத்தான் சாவித்திரியை யாராயினும் சந்திக்க முடியும் என்ற நிலை எல்லாம் வந்ததாம். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையேயான நட்பு இருந்ததாம்.

Chandrababu

சந்திரபாபுவின் அனுமதி இருந்தால்தான் ஜெமினி கணேசனாலயே சாவித்திரியை பார்க்கமுடியுமாம். எனினும் சாவித்திரி நோய் வாய்ப்பட்டிருந்தபோது சந்திரபாபுவின் நோய்வாய்ப்பட்டிருந்ததால் சாவித்தியை பார்த்துக்கொள்ள முடியவில்லையாம். சந்திரபாபுவை சினிமாத் துறையில் கைத்தூக்கிவிட்டவர்களில் முக்கியமானவர் ஜெமினி கணேசன் என அப்பேட்டியில் டாக்டர்.காந்தராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad