கனவுக்கன்னிகளாக இருந்து காணாமல் போன நடிகைகள்!.. இப்போ அவங்க நிலைமை என்ன தெரியுமா?..

Published on: March 6, 2023
act
---Advertisement---

இன்று எத்தனையோ புதுமுக நடிகைகள் வந்தாலும் என்றுமே நம் கனவுக்கன்னி இவங்கதான்ப்பா என்று சொல்லுமளவிற்கு நம் நெஞ்சத்தை விட்டு நீங்காத நாயகியாக இருந்த நடிகைகளை தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆனால் கனவுக்கன்னியாக மனதை குடைந்தவர்கள் இன்று தமிழ் நாட்டு பக்கமே காலெடுத்து வைக்கவில்லை.

asin
asin

நடிகை அசின்: உன்னை பார்த்தே என் தமிழை மறந்துட்டேன்மா என்றளவுக்கு அழகில் கேரளத்தை கலந்து தமிழில் சக்கப் போடு போட்ட நடிகை தான் அசின். விஜயுடன் காவலன், போக்கிரி, சிவகாசி போன்ற படங்களிலும் அஜித்துடன் வரலாறு, ஜெயம் ரவியுடன் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என ஒரு ரவுண்ட் அடித்து விட்டு போனார். அதன் பின் கமலுடன் விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார் அசின். இன்றளவும் அவரின் இடம் காலியாகத்தான் இருக்கின்றது.

sadha
sadha

நடிகை சதா : போயா..போயா என்ற ஒரு வசனத்தாலேயே உச்சம் பெற்ற நடிகையாக வலம் வந்தார் சதா. முதல் படத்திலேயே அந்தக் கால சுஜாதாவை நம் நியாபகத்திற்கு கொண்டு வந்தார். அடுத்த சுஜாதா இவங்க தான் என்று பார்த்தால் ஒரு சில படங்களில் நடித்து விட்டு ஆளே காணாமல் போய்விட்டார். இருந்தாலும் அந்நியன் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.

reema
reema

நடிகை ரீமாசென் : மின்னலே படத்தின் மூலம் அனைவரையும் வசீகரத்தவர் நடிகை ரீமாசென். அதன் பின் பல படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். விஜய், சிம்பு, விஷால் என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ரீமாசென் இடையிலேயே உடம்பு பெருத்து காணாமல் போய்விட்டார். இருந்தாலும் வாழ்க்கையில் திருமணம் செய்து குடும்பமும் குழந்தையுமாக செட்டிலாகி விட்டார்.

இதையும் படிங்க : நாவல்களில் இருந்து படமாக்கப்பட்டு மாஸ் ஹிட் ஆன படைப்புகள்… என்னென்ன படம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

meera
meera

நடிகை மீராஜாஸ்மின் : ரன் படத்தில் மஞ்சள் கலர் சுடிதாரில் பேருந்தில் நின்று பயணித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவியாக இளசுகளை குடைந்தவர் மீரா ஜாஸ்மின். சண்டக்கோழி படத்தில் குறும்பு தனமான நடிப்பால் அனைவரையும் கொள்ளை கொண்டார். ஆயுத எழுத்து படத்தை அவரின் ஒரு பாடலுக்காகவே பார்த்த பல கோடி ரசிகர்கள் இருந்திருக்கின்றனர். ஆனாலும் அம்மணி தமிழுக்கு முழுக்கு போட்டி மலையாளத்தை நோக்கி பயணித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உறைய வைத்து வருகிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.