More
Categories: Cinema History Cinema News latest news

யாருப்பா அவரு எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு!. ‘அறிவு இருக்கா’ என திட்டியவரை பார்க்க ஆசைப்பட்ட ரஜினி..

எழுத்தாளர், கவிஞர் ராஜகம்பீரன் ரஜினிகாந்த் பற்றி தனது கருத்துகளை இவ்வாறு சொல்கிறார்.

கருப்பு நிற நடிகர்கள் சினிமாவில் இடம்பெறாமல் இருந்த காலம். அந்த மரபை முதலில் உடைத்தவர் ரஜினி. அதே போல நடிகைகளில் சரிதா இருந்தார். ரஜினிக்குப் பிறகு விஜயகாந்த் வந்தார். பாலசந்தர் ரஜினியை வில்லன் நடிகராக அறிமுகப்படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு அந்த நெகடிவ் கேரக்டரில் இருந்து அவரை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியவர் கலைஞானம். அவர் தான் பைரவி படத்தை அவரை வைத்து எடுத்தார். கதாநாயகனாக ரஜினியின் அந்தஸ்தை உயர்த்தியவர் இயக்குனர் மகேந்திரன்.

Advertising
Advertising

இதில் முதலில் ரஜினியை ஹீரோவாக்கியதற்கு ரொம்பவே எதிர்ப்பு வந்ததாம். அதன்பிறகு அவர் எல்லாவற்றையும் சமாளித்து ரஜினியை முள்ளும் மலரும் படத்தில் ஹீரோவாக்கினார். ரஜினியே ஒரு முறை பிடித்த இயக்குனர் யார்னு கேட்கும்போது அறிமுகப்படுத்திய பாலசந்தரைச் சொல்லாமல் மகேந்திரனை சொன்னாராம். எஸ்.பி.முத்துராமன் ரஜினிக்கு பல கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

ரஜினியின் 100வது படம் ராகவேந்திரா. அவருக்குப் பிடித்த ஆன்மிகம் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அதே போல பாபா படமும் படுதோல்வி. ரஜினி ஒளிவுமறைவு இல்லாதவர். அதனால் தான் அவரை எல்லா தரப்பினருக்கும் பிடிக்கிறது. வெளி உலகிலும் அப்படியே சொட்டைத் தலையுடன் வருவார். தனது உருவம் குறித்து எந்த அக்கறையும் இல்லாதவர். அவருக்கு அரசியல் ரீதியான உள்நோக்கங்கள் எதுவுமே இல்லாதவர்.

மனதில் பட்டதை சட்டெனப் பேசக்கூடியவர் ரஜினி. அதுதான் அவரது இயல்பு. அதாவது திரையில் நடிப்பார். தரையில் நடிக்க மாட்டார். அதனால் தான் அரசியலுக்கே போகவில்லை. அரசியலுக்கு வராமலும் தொண்டு செய்யலாம். அந்த வகையில் அரசியலுக்கு வராததும் அவர் செய்த தொண்டு தான்.

Ejamaan

ரஜினி தனது பலவீனங்களை என்றுமே மறைக்கவில்லை. அதே போல அவரை விமர்சனம் பண்ணியவர்களை எல்லாம் அழைத்துப் பாராட்டியுள்ளார். எஜமான் படத்தில் ரஜினி யின் மனைவியாக நடித்த மீனா கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி தலைகாணியை வைத்து மறைத்து நடிப்பார். அதையும் ரஜினி நம்பி நடித்து இருப்பார்.

இதைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் பாரதி கிருஷ்ணகுமார். அப்போது அவர் ஒரு ஹீரோவுக்கு தனது மனைவி வயிற்றில் தலைகாணியை வைத்து நடிப்பது கூடவா தெரியாது? அவரும் கர்ப்பமாக இருக்கிறார் என பொய் சொல்ல அதையும் நம்பி விடுகிறார். இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தால் அந்த தம்பதிக்குள்ள என்ன தாம்பத்யம் இருந்துருக்க முடியும்? அப்படி ஒரு காட்சியை எடுக்கறார்னா அந்த இயக்குனருக்கு என்ன அறிவு இருக்க முடியும்?

அதை ஒப்புக்கொண்டு நடிக்கிறார்னா அந்த நடிகருக்கு என்ன அறிவு இருக்க முடியும்? லாஜிக்னா அடிப்படை அறிவு வேணாமான்னு கேட்டுள்ளார். இவர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக இருந்தவர். அன்றைய காலகட்டத்தில் இவரது பேச்சு ரஜினியை சென்றடைய, அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம். அவர் யாரப்பா? நான் யோசிக்காமல் பண்ணிட்டேன். அவரை நான் பார்க்கணும் என்றாராம்.

Published by
sankaran v

Recent Posts