உங்களுக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன்.- ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்த நயன்தாரா..!

by Rajkumar |   ( Updated:2023-04-06 01:16:36  )
உங்களுக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன்.- ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்த நயன்தாரா..!
X

தமிழில் பிரபலமான கதாநாயகிகளில் டாப் லெவலில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என தமிழக மக்களால் அழைக்கப்படுகிறார். தற்சமயம் தமிழ் கதாநாயகிகளில் இவரே அதிக சம்பளம் வாங்குகிறார்.

முன்பெல்லாம் கதாநாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா தற்சமயம் சில படங்களில் சோலோவாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமானது. இந்த நிலையில் இவர்கள் வாடகை தாய் முறை மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

Nayanthara and Vignesh Shivan
Nayanthara and Vignesh Shivan

சமூக வலைத்தளங்களில் அந்த விஷயம் பெரும் வைரலாகி அதனால் அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றனர் விக்கி நயன் தம்பதியினர். அதன் பிறகு ஒரு வழியாக அந்த சர்ச்சைகளில் இருந்து மீண்டு வந்தனர்.

கோபமான நயன்தாரா:

தெய்வ பக்தி அதிகம் உள்ளதால் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தனர், திருமணத்திற்கு பிறகும் கூட திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் தஞ்சாவூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட இருவரும் சென்றுள்ளனர். விக்கி, நயன் வருவதை அறிந்து பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் அங்கு கூடி விட்டனர். இதை பார்த்த விக்னேஷ் சிவன் “நாங்கள் சாமி கும்பிடதான் இங்கு வந்துள்ளோம். எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்” என கூறியுள்ளார்.

அப்படியும் கேட்காமல் ரசிகர்கள் சிலர் அவர்களை போட்டோ எடுக்கவே கடுப்பான நயன்தாரா “உங்களுக்கு அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” என ரசிகர்களை எச்சரித்துள்ளார். ரசிகர்களால் வளர்ந்த நயன்தாரா, ரசிகர்களை இப்படி மிரட்டலாமா? என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Next Story