அந்த பொண்ணு நடிச்சா ஸ்க்ரீன கிழிச்சிடுவேன்! டான் படம் பார்த்துட்டு கழுவி ஊற்றிய ரசிகர்...!
விஜய் அஜித் என அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் ஒருமுறை தன் வெற்றியை நிலைநாட்டி விட்டார் சிவகார்த்திகேயன். ஆம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டான் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாக்டர் படத்தை போலவே டான் படத்திலும் சிவகார்த்திகேயன் அவரது திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் படத்தில் நடித்துள்ள நடிகை ஒருவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிங்கர் சிவாங்கி தான். இவரது குறும்புத்தனத்தால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சிவாங்கிக்கு டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது சிவாங்கியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் சிவாங்கி குறித்து கூறியதாவது, "ஷிவாங்கி ஒரு லூசு, குரங்கு. அந்த பொண்ண அடுத்த தடவ படத்துல பாத்தா ஸ்க்ரீன கிழிச்சிடுவேன். அசிங்க அசிங்கமா கேட்ருவேன். அந்த பொண்ணு நல்லா பாடும். ஆனா தயவு செஞ்சு நடிக்க வேண்டானு சொல்லுங்க" என கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட சிவாங்கி ரசிகர்கள் பலரும் அந்த நபரை திட்டி வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் இது சிவாங்கிக்கு முதல் படம் அதனால் கொஞ்சம் தவறுகள் இருக்கலாம் அதற்காக இப்படியா பேசுவது என சிவாங்கிக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகிறார்கள்.