Connect with us

கட்டிக்கப்போற பொண்ண இப்படியா கட்டாயப்படுத்துவீங்க? பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்….!

rahul

Cinema News

கட்டிக்கப்போற பொண்ண இப்படியா கட்டாயப்படுத்துவீங்க? பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்….!

ஒரு நடிகரோ அல்லது நடிகையோ அவர்களது திருமண செய்தியை அறிவித்தால், ரசிகர்கள் மற்றும் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள். ஆனால் இங்கு திருமண செய்தியை அறிவித்த நடிகர் ஒருவரை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அப்படி என்ன நடந்தது என்று தானே நினைக்கிறீர்கள். சரி வாங்க விஷயத்துக்கு போகலாம். தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. பல படங்களில் நடித்துள்ள ராகுல் ராமகிருஷ்ணா சமீபத்தில் ராஜமெளலி நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

rahul

இந்நிலையில் ராகுலுக்கும் ஐடி துறையை சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக ராகுல் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு லிப் லாக் முத்த புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பமானது.

rahul ramakrishna

அதாவது ராகுல் மற்றும் பிந்து ஆகிய இருவருக்கும் இது காதல் திருமணம் தான். இருப்பினும் பிந்து மிகவும் பிரைவேட்டான பொண்ணு என்று ராகுல் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அவர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுப்பது போல தெரிகிறது.

பிந்து வேண்டாம் என தடுத்தும் ராகுல் அவருக்கு பலவந்தமாக முத்தம் கொடுக்கும் அந்த புகைப்படத்தை அவரது நண்பர்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில் இதை கண்ட ரசிகர்கள் பலரும் ராகுலுக்கு வாழ்த்து கூறுவதை விட அட்வைஸ் மழையை தான் அதிகமாக பொழிந்து வருகிறார்கள்.

rahul ramakrishna

மேலும் அந்த பெண்ணுக்கான பிரைவசியை கொடுங்க. இப்படி பொது இடத்தில் அவங்கள கட்டாயப்படுத்தி எடுத்த லிப் லாக் போட்டோவை போடாதீங்க, சீக்கிரம் அந்த போட்டோவ டெலிட் பண்ணுங்க என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

rama krishna

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top