டேய் முட்டாள்!.. ரசிகரை திட்டிய சூர்யாவின் பவுன்சர்ஸ்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர் புரோ!..

Published on: November 13, 2024
surya 44
---Advertisement---

Kanguva: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. திரையுலக மார்க்கண்டேயன் என பெயரெடுத்த சிவக்குமாரின் மூத்த மகன் இவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே இவருக்கு இருந்தது இல்லை. பல இயக்குனர்கள் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டார்.

நேருக்கு நேர் படத்தில் சூர்யாவை அறிமுகம் செய்து வைப்பதில் இயக்குனர் வசந்த் உறுதியாக இருந்தார். சரி முயற்சி செய்து பார்ப்போம் என்கிற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்தவர்தான் சூர்யா. துவக்கத்தில் சினிமாவில் நடிப்பது அவருக்கு சிரமமாகவே இருந்தது. நிறைய அவமானங்களையே சந்தித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஓவர் ஹைப் ஏத்தி ரசிகர்களை கதறவிட்ட 4 திரைப்படங்கள்!.. இதுல இந்தியன் 2 வேறலெவல்!..

ஒருகட்டத்தில் நந்தா, காக்க கக்க, பிதாமகன் என டேக் ஆப் ஆனார். ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி சிங்கம், சிங்கம் 2 என உறுமினார். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் எனவும் நிரூபித்தார்.

2 வருடங்கள் கழித்து அவரின் கங்குவா படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேல் இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் சூர்யா. அதோடு, அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஊடகங்களிடம் இப்படம் பற்றி பேசினார்கள்.

kanguva
#image_title

பொதுவாக ஒரு பெரிய நடிகர் அல்லது நடிகை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எனில் அவரை சுற்றி பவுன்சர்கள் இருப்பார்கள். செய்தியாளர் மற்றும் ரசிகர்களை கிட்ட நெருங்கவிட மாட்டார்கள். யாரேனும் ரசிகர் ஒருவர் ஆர்வத்துடன் செல்பி எடுக்க வந்தால் தள்ளிவிட்டு விடுவார்கள்.

இந்நிலையில், கங்குவா புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு சூர்யா வந்தபோது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது சூர்யாவின் பின்னால் இருந்த பவுன்சர் ஒருவர் ‘Hey Fool’ என அந்த ரசிகரை திட்டும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில செய்தியாளர்களையும் அந்த பவுன்சர்கள் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி படத்துல மட்டும் நடிப்பீங்க!… விஜய் படத்துல நடிக்க முடியாதா?!… இப்ப எங்க போச்சு உங்க கொள்கை!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.