இன்னும் நீங்க மாறவே இல்ல சார்... வடிவேலுவின் புதிய வீடியோ பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்...

வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் எப்போது திரையில் அதே கலகலப்புடன், சுறுசுறுப்புடன் பார்ப்போம் என்று வடிவேலு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த செய்தி பலரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் என பலர் நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆனால், அதில் ஹீரோவாக சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர், நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
தற்போது, லாரன்ஸ் நாயகனாக நடிக்க சந்திரமுகி இயக்குனர் பி.வாசு இயக்க, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அண்மையில், இப்படத்தின் பூஜைகள் நடைபெற்று மைசூரில் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்களேன் - சிம்புவுக்கு அடித்தது ஜாக்பாட்.! சூர்யாவுக்கு டாட்டா காட்டிய மெகா ஹிட் இயக்குனர்.! விவரம் இதோ…
இந்நிலையில், இந்த பட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெரிகிறது. அதாவது, படப்பிடிப்பில் இருந்து வெளியான ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வேற யாருமில்லை நம்ம வைகைப்புயல் வடிவேலு செய்யும் நகைச்சுவை காட்சி தான் இடம்பெற்றுள்ளது.
மகிழ்வித்து மகிழ் ????♥️#Chandramukhi2 @offl_Lawrence pic.twitter.com/cKFrfgiaM9
— Actor Vadivelu (@Vadiveluhere) July 20, 2022
விஜய்யுடன் நடித்த 'சுறா’ திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சியை, சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் செய்து காட்டியுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிர்கர்கள் இன்னும் நீங்க மாறவே இல்ல சார் என்று சொல்லி ரசித்து வருகிறார்கள்.