சமந்தாவை அலேக்காக தூக்கி சென்ற பாலிவுட் ஹீரோ.. வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி..,,

by Manikandan |
சமந்தாவை அலேக்காக தூக்கி சென்ற பாலிவுட் ஹீரோ.. வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி..,,
X

காஃபி வித் கரண் சீசன் 7-ன் ஜான்வி கபூர் மற்றும் சாரா அலி கான் எபிசோடுக்கு பிறகு, அக்‌ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் கலந்துகொள்ளும் எப்பிசோட் இந்த வியாழன் அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தனது சமூக வலைதளத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சமந்தா கலந்து கொண்ட எபிசோடின் ப்ரோமோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

இந்த எபிசோட் ப்ரோமோவில், கலகலப்பான உரையாடல்கள், அரட்டைகள், சமந்தா மற்றும் அக்‌ஷய் வழங்கும் நகைச்சுவையான நடவெடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, அக்‌ஷய் குமார் சமந்தாவை கையில் அலேக்காக தூக்கிக்கொண்டு நிகழ்ச்சிக்குள் அதிரடியாக நுழைந்தது தான் இதில் ஹைலைட்.

இதையும் படிங்களேன் - ஏன்டி நான் படம் பண்றப்போ நீ இல்லாம போய்ட்ட..?! சர்ச்சை நாயகியை பார்த்து பொறாமைப்பட்ட பாரதிராஜா.!

இதனையடுத்து, கரண் நடத்தும் பேச்சிலரேட் பார்ட்டியில் நடனமாட பாலிவுட்டில் இருந்து யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று சமந்தாவிடம் கரண் கேட்டுள்ளார். இதற்கு, சமந்தா 'ரன்வீர் சிங்' என்று பதிலளித்தார், இது அக்ஷய் குமாரரையும் கரனையும் ஆச்சரியப்படுத்தியது.

Next Story