ஊத்துக்குளி வெண்ணை போல அழகு!.. மிச்சம் வைக்காம அழகை காட்டும் மாளவிகா மோகனன்...

Malavika Mohanan: அப்பா திரைப்படத்துறையில் இருந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மோகனன் மலையாள சினிமாவில் நடன இயக்குனராக இருந்தவர். அவரோடு படப்பிடிப்புக்கு போனபோது ஒரு நாள் மம்முட்டியின் கண்ணில் பட்டுவிட்டார்.
உடனே அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட மம்முட்டி தனது மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மாளவிகாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் சினிமாவே மாளவிகாவின் கேரியராக மாறிவிட்டது. அதோடு, துக்கலான கவர்ச்சி காட்டி மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் அவரை பிரபலமடைய வைத்தது.
இதன் மூலம் இவருக்கு சினி்மா வாய்ப்புகளும் கிடைத்தது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. அடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும் நடித்தார்.
இந்த படத்தில் ஓரளவுக்கு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், தனுஷுடன் அவர் நடித்த மாறன் திரைப்படத்தின் தோல்வி அவரின் மார்க்கெட்டையே காலி செய்துவிட்டது. எனவே, ஹிந்தி சினிமா பக்கம் போய் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார். சில ஹிந்தி ஆல்பம் பாடல்களிலும் நடித்தார்.
ஒருபக்கம். பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இப்படி நான் நடித்தது இல்லை என ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார். தமிழ், ஹிந்தி, மலையாளம் என கலக்கி வரும் மாளவிகா அவ்வப்போது மொத்த அழகையும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் புதிதாக பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.